பிரதமர் மோடிக்கு எதிராக
அகில இந்தியா அரசியல்
ஸ்டாலின் முயற்சி வெற்றிப்பெறுமா?இந்தி பேசாத வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் தென்னிந்திய அரசியல் மு.க.ஸ்டாலினுக்கு ஒத்துவருமா? என்ற கேள்வி வடநாட்டு தலைவர்கள் மத்தியில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்திப் பேசாத மாநிலங்களையும், தென்மாநிலத்தையும் இணைத்து பாஜக கட்சிக்கு எதிராக அரசியல் நடத்தும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த முயற்சியில் வெற்றிப் பெறுவாரா? அல்லது வடநாட்டு தலைவர்கள் ஒன்றிணைந்து ஸ்டாலினை ஏற்றுக் கொண்டு அவர் பின் தொடர்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

குறிப்பாக கேரளா, மேற்குவங்கம், ஓடிசா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் ஸ்டாலின் எடுக்கும் முயற்சிக்கு ஆதரவு தருவார்களா? என்ற கேள்வியும் காங்கிரஸ் கட்சியோடு இணைந்து பாஜக கட்சியை எதிர்க்க ஒத்துவராத சில கட்சிகள் ஸ்டாலினோடு இணைந்து திராவிட மாடல் அரசியலை ஏற்றுக்கொள்வார்களா? இன்றைய காலகட்டத்தில் அகில இந்திய அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் கேரளாவை தவிர வேறு எங்கும் ஆட்சியில் இல்லாதபோது கம்யூனிஸ்ட்டுகள் ஒரு காலத்தில் பாஜக கட்சியை ஆதரித்து காங்கிரசை எதிர்த்தவர்கள் இன்றைக்கும் கேரளா, மற்றும் மேற்குவங்கம், மணிப்பூர், திரிபுரா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை கம்யூனிஸ்ட்டுகள் எதிர்த்து வரும் சூழ்நிலையில் அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியை இழந்து நிற்கும் நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்கும் முயற்சியில் கம்யூனிஸ்ட்டுகள் ஆதரவு தெரிவித்தாலும் அகில இந்திய அளவில் மு.க.ஸ்டாலின் அவர்களால் அரசியல் செய்து வெற்றிப்பெற முடியுமா என்ற செய்தி எழுந்துள்ளது.

குறிப்பாக இந்தி பேசாத மாநிலங்கள் இணைந்து மத்திய அரசை ஆட்சி செய்யும் பாஜகவையும், எதிர்க்க வேண்டும் என்ற மு.க.ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை எந்த அளவிற்கு எடுப்படும் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மறைந்த முதல்வர் கருணாநிதி அவர்கள் வடநாட்டு தலைவர்களை அணி சேர்த்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார். அந்த வெற்றியில் வி.பி.சிங் அவர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி காங்கிரசுக்கு எதிராக போர்கொடி தூக்கினார். அதன் பிறகு அந்த கட்சியின் ஆட்சியும் நிலைக்கவில்லை என்பது கடந்த கால வரலாறு.

அதே போல் இன்னொரு நிலையை ஆந்திரா முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு அகில இந்திய அரசியலை கையிலெடுத்தார். அதுவும் காங்கிரசுக்கு எதிராக அவர் முன்னெடுத்த அரசியல் அகில இந்திய அளவில் வெற்றிப்பெற்றது. அதன் பிறகு அவர் முன்னெடுத்த அரசியல் நீண்ட நாள் நிலைக்கவில்லை. இறுதியில் சந்திரபாபு நாயு-டு அவர்கள் காங்கிரசை எதிர்த்து அரசியல் செய்தார். தோல்வி ஏற்பட்டது. பிறகு பாஜக கட்சியை எதிர்த்து தேர்தலை சந்தித்தார். தோல்வி ஏற்பட்டது தற்போது ஜகன்மோகன் ரெட்டியை எதிர்த்து அரசியல் செய்தார் தோல்வியை சந்தித்து இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாகிவிட்டார். இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு புது புது அவதாரங்கள் அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் தோன்றி மறைவதுண்டு நிரந்தரமாக நிலைத்து நிற்பதில்லை என்பதே கடந்த கால வரலாறு.

குறிப்பாக தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த காலங்களில் திமுகவிற்கு எதிராக திமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று எம்.ஜி.ஆரோடு கூட்டணி அமைத்து டெல்லியில் இருந்த பிரதமர் இந்திராகாந்தி அவர்களிடம் மனு கொடுப்பதற்கு கம்யூனிஸ்ட் இயக்க தலைவர் கல்யாணசுந்திரம் அவர்களும், எம்.ஜி.ஆரும் இணைந்து மனு கொடுத்தார்கள். அந்த மனுவின் எடுக்கப்பட்ட நடவடிக்கை தான் சர்க்காரிய கமிஷனாக மாறி திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வைத்தது. அதே கம்யூனிஸ்ட் கட்சிகள் கடந்த தேர்தலுக்கு முன் நடைபெற்ற தேர்தலில் தமிழ்நாட்டில் விஜயகாந்த் தலைமையில் ஒரு அணியை உருவாக்கி திமுகவிற்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டு திமுக ஆட்சிக்கு வருவதையே தடுத்து நிறுத்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியோடு இணைந்து கொண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளை இணைத்துக் கொண்டு இந்தி பேசாத மாநிலங்களை அழைத்துக் கொண்டு ஓரணியில் திரட்டி மத்திய அரசுக்கு எதிராக போராடி வெற்றிப்பெற நினைக்கும் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய முயற்சி வெற்றிப்பெறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

- டெல்லிகுருஜி