அதிரும் திமுக…!
அதிரடி அண்ணாமலை…!
குழப்பத்தில் அதிமுக
எதிர்கட்சியாக செயல்படும் பாஜக…!



தமிழ்நாட்டு அரசியலில் அண்ணாமலை ஐபிஎஸ் அரசியல் அதிரடியாக நடைபெற்று வருகிறது. பொறுப்பேற்று ஓராண்டு காலத்தில் திமுக ஆட்சிக்கு எதிராக அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுகள் திமுகவை அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு திக்கு முக்காடாவும் செய்துள்ளது. எதிர்கட்சியாக செயல்பட வேண்டிய அதிமுக ஒ.பி.எஸ்., ஈ.பிஎஸ் என்று உட்கட்சி பிரச்சனையில் எதிர்கட்சி வேலைகளை செய்வதில் இருந்து சற்று தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில் ஒ.பி.எஸ் சசிகலாவை மீண்டும் இணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். ஈ.பி.எஸ் தங்கமணி, வேலுமணி மீதுள்ள வழக்குகளை எப்படி சமாளிப்பது என்று யோசித்து வருகிறார். இப்படி எதிர்கட்சிகள் தங்கள் கடமையை செய்வதில் இருந்து மக்கள் எதிர்ாபார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில் இருந்து உள்ளனர்.

ஆனால் பாஜக கட்சியின் தலைவர் அண்ணாமலை அவர்கள் அரசியல் ரீதியாக மக்கள் மன்றத்தில் அதிரடியாக பல கேள்விகளை முன்னெடுத்து வைக்கிறார். திமுக கழக அமைச்சர்கள் குறித்தும் செய்தி தொடர்பாளரின் அறிக்கைகள் குறித்தும் 100 கோடி ரூபாய் கேட்டு தொடரப்பட்ட வழக்கு குறித்தும் திமுக கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித சலனும் இன்றி அரசியல் ரீதியாக தனது கருத்துக்களை வெளிப்படுத்துவதில் அண்ணாமலை தனது அரசியல் ஆளுமையை வெளிப்படுத்தும் விதமாக சவால்விடுகின்ற அளவிற்கு திமுக மீது பல அடுக்கான குற்றச்சாட்டுகளை மக்கள் மன்றத்தின் முன் எடுத்துவைக்கிறார்.

இதனால் தமிழ்நாட்டு மக்கள் பாஜக கட்சியின் அரசியலை உற்றுநோக்கி பார்க்க தொடங்கிவிட்டார்கள். தனித்துப் போட்டியிட்டு நகர்மன்ற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் பாஜக கட்சியின் சின்னம் பிரபலமடைந்து வருவதோடு சில இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. பல இடங்களில் வாக்குகளை உயர்த்தியுள்ளது. இவற்றை பார்க்கும் பொழுது சட்டமன்றத்தில் ஐந்து உறுப்பினர்கள் இருந்தாலும் தமிழ்நாட்டில் எதிர்கட்சியாக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்திக்கொண்டு வருகிறார் என்று பொதுமக்கள் பேசுவதோடு பல அரசியல் தலைவர்களும் இதுப்பற்றி பேசி வருகிறார்கள்.

குறிப்பாக அரசியல் சாணக்கியர் என்று கூறப்பட்ட முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் மூத்த தலைவருமான பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் போன்றவர்கள் அண்ணாமலையின் அரசியலை வெகுவாக பாராட்டுகிறார்கள். இருந்தாலும் பெரியார் அண்ணா கொள்கையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மாற்று அரசியலை முன்னெடுத்து செல்வதற்கு பண்ருட்டியார் விரும்பவில்லை என்பதை இன்றைக்கும் பார்க்க முடிகிறது. எத்தனையோ வாய்ப்புகள் தேசிய கட்சியில் இருந்து குறிப்பாக காங்கிரஸ் கட்சி பாஜக கட்சி போன்றவைகளில் இருந்து பல அழைப்புகளும் பதவிகளும் அவரை சுற்றிவந்தப் பொழுதும் அவற்றையெல்லாம் ஏற்க மறுத்துவிட்டு தற்போது அதிமுகவில் இருந்துவரும் பண்ருட்டியார் திராவிடத்தை நேசிப்பதிலேயே தேசியத்தை விரும்பவில்லை என்பதை பார்க்கும் பொழுது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான பல திட்டங்களை நிறைவேற்றிய பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள் அரசியலில் இருந்து விலகி இருப்பது ஏற்புடையது அல்ல என்கிறார்கள் பல கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள்.

அண்ணாமலையின் அதிரடி அரசியல் தமிழகத்தில் பல மாற்றங்களை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அவருக்கு தற்பொழுது ஓய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.

- டெல்லிகுருஜி