ஒற்றை தலைமைக்கு தயாராகும்
எடப்பாடி பழனிசாமி…!அதிமுக உட்கட்சி தேர்தலில் பல்வேறு மாவட்ட தலைவர்களை தன் வசம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்த எடப்பாடி பழனிசாமி கட்சியில் உள்ள 80 சதவிகிதம் மாவட்ட மாநில நிர்வாகிகள் தனக்கு ஆதரவாக மாற்றியுள்ளார். மீதமுள்ள சு0 சதவிகிதம் பேர் மட்டுமே ஒ.பி.எஸ். ஆதரவாளர்களாகவும், சசிகலா ஆதரவாளர்களாகவும் இருந்து வருகிறார்கள். விரைவில் கட்சியின் பொதுக்குழுவை கூட்டி புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதத்தில் ஒற்றை தலைமையை வலியுறுத்தப் போவதாக தனது ஆதரவாளர்களிடம் கூறி வருகிறாராம். இதை தெரிந்து கொண்ட ஒ.பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவாக சில மாவட்ட செயலாளர்களை அழைத்து பேசிய போது அவர் சார்ந்த சமுதாயத்தை சேர்ந்த ஒருசிலரை தவிர மற்றவர்களெல்லாம் எடப்பாடி பக்கம் சாய்ந்து விட்டதாகவும் இதனால் ஒ.பி.எஸ் தான் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறோம் என்பதை உணர்ந்து கட்சி நிர்வாகத்தில் எந்தவித குறுக்கீடும், தலையீடும் செய்யாமல் ஒதுங்கி கொண்டு சசிகலா குறித்து எந்தவிதமான பேச்சையும் முன்னெடுக்காமல் அமைதி அடைந்துவிட்டாராம். தற்பொழுது உள்ள சூழ்நிலையில் அதிமுக முழுக்க முழுக்க எடப்பாடியின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிட்டதாக அவரது ஆதரவாளர்களும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் உறுதியாக கூறி வருகிறார்கள். இதற்கு ஏற்றாற் போல் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படத்தின் ஒரு பாடலை எடப்பாடியாரை சந்திக்கும் போதெல்லாம் சில அதிமுக பிரமுகர்கள் பாடி வருகிறார்களாம். “நீங்க நல்லா இருக்கணும் அதிமுக கட்சி முன்னேற நல்லவங்க எல்லாரும் உங்க பின்னாலே” நீங்க நெனைச்சதெல்லாம் நடக்கும் கட்சியிலே உங்க முன்னாலே

டெல்லிகுருஜி