கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி
அரசு விழாவாக கொண்டாடப்படும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு



சென்னை:

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 110-வது விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்,

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும். மேலும் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதி சிலை நிறுவப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.