பிரம்மோற்சவ விழா: திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில் நாளை தேரோட்டம்



திருநீர்மலையில் ரங்கநாத பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது.


தாம்பரம்:

திருநீர்மலையில் ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 19-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழா வருகிற 29-ந்தேதி வரை நடக்கிறது.

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. கோவிலை சுற்றி உள்ள 4 மாட வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தேரோட்டம் நடைறெ உள்ள சாலைகள் மிகவும் குண்டும், குழியுமாக காணப்பட்டன. இதனால் திருத்தேரை 4 மாட வீதிகளில் பக்தர்கள் இழுத்து செல்வதில் சிரமம் ஏற்படும் சூழல் இருந்தது.

இதனால் பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தாம்பரம் மாநகராட்சி சார்பில் ரூ.9.60 லட்சம் மதிப்பில் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் கிழக்கு, வடக்கு மாட வீதிகளில் புதிதாக சாலை அமைக்கப்பட்டு உள்ளது.