விவசாயிகள் உற்பத்தி செய்யும்
ஒவ்வொருநெல் தானியத்தையும்
அரசு கொள்முதல் செய்ய வேண்டும் ராகுல்காந்தி வலியுறுத்தல்
புதுடெல்லி:

தெலுங்கானா மாநிலத்தில் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக நெல்கொள்முதல் செய்வது தொடர்பான பிரச்சினையில், விவசாயிகளுக்கு ஆதரவாக ராகுல்காந்தி குரல் கொடுத்துள்ளார்.

இது குறித்து தெலுங்கு மொழியில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

தெலுங்கானா விவசாயிகளால் விளைவிக்கப்பட்ட நெல்லைக் கொள்முதல் செய்யும் தார்மீகப் பொறுப்பை பாஜக மற்றும் டிஆர்எஸ் அரசுகள் புறக்கணித்து வருகின்றன. இந்த விவகாரத்தை அரசியலாக்குவது வெட்கக்கேடானது.

விவசாயிகளை துன்புறுத்துவதை நிறுத்துங்கள், தெலுங்கானாவில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு தானியத்தையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.

தெலுங்கானாவில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு நெல்லும் கொள்முதல் செய்யப்படும் வரை விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும். இவ்வாறு ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.