உங்களின் ஒருவன்... முதல்வர் ஸ்டாலின் எழுதிய சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் ராகுல் காந்தி


   


முதல்வரின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவிற்கு தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார்.

சென்னை:

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் “உங்களின் ஒருவன்” என்ற தலைப்பில் புத்தகமாக சுயசரிதை எழுதியுள்ளார்.  இந்த புத்தகத்தின் முதல் பாகம் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

நந்தம்பாக்கம் வர்த்தக மைய கூட்டரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று “உங்களில் ஒருவன்” புத்தகத்தை வெளியிட, அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.

விழாவிற்கு தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார். தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு முன்னிலை வகித்தார். தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. வரவேற்புரையாற்றினார். 

கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர்அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவரும், ராஷ்டீரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவின் நிறைவாக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை நிகழ்த்துகிறார்.