உ.பி. சட்டசபை தேர்தல் - கோரக்பூரில் வேட்புமனு தாக்கல் செய்தார் யோகி ஆதித்யநாத்
உத்தர பிரதேச தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை எதிர்த்து ஆளும் பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரி எஸ்.பி. சிங் பாகெல் போட்டியிடுகிறார்.
உ.பி. சட்டசபை தேர்தல் - கோரக்பூரில் வேட்புமனு தாக்கல் செய்தார் யோகி ஆதித்யநாத்
அமித்ஷா முன்னிலையில் வேட்பு மனுதாக்கல் செய்த யோகி ஆதித்யநாத்
புதுடெல்லி:
உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதிவரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
உத்தர பிரதேச தேர்தலில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கர்ஹால் தொகுதியில் போட்டியிடுகிறார். முதல் முறையாக தேர்தல் களம் காணும் அவரை எதிர்த்து ஆளும் பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரி எஸ்.பி. சிங் பாகெல் போட்டியிடுகிறார். இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தின் முதல் மந்திரியான யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் உள்துறை மந்திரி அமித்ஷா உடனிருந்தார்.