உள்ளாட்சி தேர்தல் பணமின்றி தவிக்கும் சுயேட்சை வேட்பாளர்கள்…!ஆர்வம் மிகுதியாலும் சில கட்சிகளின் நிர்பந்தத்தாலும் உள்ளாட்சி தேர்தலில், தனித்தும், சுயேட்சைகளாகவும் போட்டியிடும் ஒரு சில வேட்பாளர்கள் தாங்கள் சார்ந்த கட்சிகளிடமிருந்தோ அல்லது பொதுமக்களிடத்தில் இருந்தோ எந்தவிதமான நிதியுதவியும் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் தமிழ்நாட்டில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பல வேட்பாளர்கள். கௌரவத்திற்காக தனித்து போட்டியிடுவோம் என்று கூட்டணி அமைக்காமல் தனித் தனி வேட்பாளர்களை நிறுத்திய சில கட்சிகள் அவர்கள் கூட கட்சிகள் சார்பில் எந்தவித பண உதவியும் செய்யவில்லை என்பதால் சில இடங்களில் அதிமுக திமுக கட்சியினருடன் பேரம் பேசி நட்பை உருவாக்கி அவர்களிடமிருந்து பலனை எதிர்பார்த்து பல வேட்பாளர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் தமிழகம் முழுவதும் எதிரொலிக்கிறது. சில ஊர்களில் சில மாவட்டங்களில் பணம் இல்லாமல் ஏன் வேட்பாளர்களின் போட்டியிடுகிறார்கள் என்று பொதுமக்களே கேள்வி எழுப்புகிறார்கள். இன்னும் சில இடங்களில் நாங்கள் ஒட்டுப்போட்டால் நீங்கள் வெற்றிப் பெற முடியாது அப்படியானால் எங்கள் ஒரு ஒட்டை நாங்கள் ஏன் சிதறடித்து தோல்வி அடைபவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். ஆகவே கட்சி வேறுபாடின்றி வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களுக்கு நாங்கள் வாக்கு அளிக்கிறோம் என்று கூறுகிறார்கள். 

இதுபோன்ற தள்ளாட்ட நிலையில் உள்ள சில இயக்கங்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை வேட்பு மனு வாபஸ் பெரும் வரை ஆசை வார்த்தை கூறி மனுவை வாபஸ் வாங்காமல் பார்த்துக் கொள்கிறார்கள். இருந்தாலும் பணமின்றி தேர்தல் பணியை செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்த சில வேட்பாளர்கள் தங்கள் விருப்பம் போல் மாற்று கட்சியினருடன் தொடர்பு வைத்துக் கொண்டு தலைவிதியை நினைத்து தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இந்த நிலையில் திமுக அதிமுகவை தவிர மற்ற கட்சிகள் பணப்பிரச்சனையையும் வேட்பாளர்களின் கோரிக்கையையும் எவ்வாறு நினைவேற்ற போகிறார்கள் சவால்களை சந்திக்க போகிறார்கள் என்பது தெரியவில்லை.            

- டெல்லிகுருஜி