நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் தலைவர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்


   


தமிழகத்தில் இன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் தலைவர்கள், காலையிலேயே வந்து வாக்களித்தனர்.

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் அடையாறில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தா.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் ஆழ்வார்பேட்டை பீமன்ன தோட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆலப்பாக்கம் வேளாங்கண்ணி பள்ளியிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிதம்பரத்தில் உள்ள பள்ளியிலும் காலையில் வாக்களித்தனர். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அரும்பாக்கத்தில் உள்ள குட்ஹோப் பள்ளியில் வாக்களித்தார்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வளசரவாக்கம் லட்சுமி நகரில் உள்ள மாதா பப்ளிக் பள்ளியில் வாக்களித்தார். முன்னாள் மேயர் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன் அடையாறு காந்தி நகரில் உள்ள குமார ராஜா முத்தையா ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் வாக்களித்தார்.

கிண்டியில் உள்ள வாக்குச்சாவடியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மனைவியுடன் வந்து வாக்களித்தார். பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆவடியில் காமராஜர் நகரில் உள்ள பள்ளியில் வாக்களித்தார். குறு-சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் குன்றத்தூரில் உள்ள பள்ளியில் வாக்களித்தார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மந்தவெளியில் உள்ள பள்ளியில் வாக்களித்தார்.