ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த
உக்ரைன் குழு பெலாரஸ் சென்றடைந்தது


   


அமைதி பேச்சுவார்த்தைக்காக ரஷிய குழு ஏற்கனவே பெலாரஸ் சென்றுள்ள நிலையில், உக்ரைன் குழுவினரும் பெலாரஸ் சென்றடைந்துள்ளது.

பெலாரஸ்:

உக்ரைன் மீது ரஷிய படைகள் 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு வந்தால் மட்டுமே இழப்புகளை தவிர்க்க முடியும். 

ரஷியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் தனது பிரதிநிதிகளை பெலாரசின் கோமல் பகுதிக்கு அனுப்ப ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் குழு பெலாரஸ் சென்றடைந்தது. உக்ரைன் மீது ரஷியா நடத்தும் போரை நிறுத்துவது தொடர்பாக பெலாரசில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.