திமுக அபார வெற்றி..!
ஒரு மாநகராட்சி கூட கைப்பற்றவில்லை அதிமுக!        




நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான அணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. மொத்தம் உள்ள சுபு மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. பு38 நகராட்சிகளிலும் நான்கில் மூன்று பங்கு பகுதியை திமுக கைப்பற்றியுள்ளது. குறிப்பாக சேலம், கோவை, சென்னை போன்ற இடங்களில் திமுகவின் வெற்றி குறிப்பிடத் தகுந்த அளவில் திட்டமிட்டபடி வெற்றியை பெற்றுள்ளது. இந்த தேர்தலை பொறுத்தவரை திமுக ஆளுங்கட்சி என்பதும் திமுகவின் கூட்டணி பலம் ஒன்றுப்பட்டு தேர்தலை சந்தித்ததும் இந்த மாபெரும் வெற்றிக்கு கிடைத்த பரிசாக பார்க்கலாம். அதிமுகவை பொறுத்தவரை தனித்து போட்டியிட்டதும், அதிமுக கூட்டணியை விட்டு தோழமை கட்சிகள் விலகி சென்றதும், குறிப்பாக பாமக, பாஜக அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறியதும் சரியான திட்டமிடல் இல்லாததும் இரட்டை தலைமையில் ஏற்பட்ட அதிர்ச்சியும் அதிமுகவின் படுதோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது. இவை தவிர பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, போன்ற கட்சிகள் தனித்து போட்டியிட்டு தங்களது தோல்வியை வரவழைத்துக் கொண்டார்கள். அதுமட்டும் அல்ல அவர்கள் வாக்கு வங்கியையும் இழந்து எதிர்காலத்தில் கூட்டணி சேருவதற்கான தகுதியையும் இழந்து நிற்கிறார்கள். இந்த தேர்தல் முடிவு திமுகவுக்கு மகிழ்ச்சியையும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.    

மதிமுக, பாஜக, பாமக இவர்களுக்கு அதிர்ச்சியையும், ஆபத்தான முடிவு என்பதையும் உணர்த்தியுள்ளது. மேலும் இந்த தேர்தல் முடிவின் தாக்கம் சு0சு4 ஆம் ஆண்டு நடைபெறப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்க கூடும். அந்த எதிர்ப்பை சமாளிக்க வேண்டும் என்றால் அதிமுக தனது கூட்டணி கட்சிகளை இப்பொழுது இருந்தே தேர்வு செய்து நட்பு பாராட்டி தொண்டர்களை உற்சாகப்படுத்தி புதிய வியூகம் வகுத்து அரசியல் களத்தில் இருந்தால் மட்டுமே அதிமுகவிற்கு அரசியல் எதிர்காலம் உண்டு. திமுகவை பொறுத்தவரை ஆளுங்கட்சி என்பதும் நான்காண்டுகள் ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதும், நாடாளுமன்ற தேர்தலில் அதன் கூட்டணி பலமும், வெற்றிக்கான வழிவகைகளை உருவாக்கி தரும். திமுகவை பொறுத்தவரை தேர்தல் முடிவு எதிர்பார்த்த ஒன்று, அதிமுகவை பொறுத்தவரை எதிர்பாராத ஏமாற்றம் அல்ல சரியான திட்டமிடல் இல்லாததினால் தோழமை கட்சிகள் விலகியதும், அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சிக்கு ஆளானதும் தோல்விக்கான காரணங்கள். இதை நேற்றே அக்னிமலர்கள் தெளிவாக பதிவிட்டிருந்தது. திமுகவிற்கு அதிக இடங்களில் வெற்றி, அதிமுகவிற்கு அதிக வாக்குகள்.

- டெல்லிகுருஜி