2024 எம்.பி தேர்தல் 
பிரசாந்த் கிஷோர் தேர்தல் கணிப்பு
வெற்றி பெறுமா?



அரசியல் ஆலோசகராகவும் தேர்தல் கருத்து கணிப்பாளராகவும், தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு இந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் நிலவி வரும் அரசியல் சூழ்நிலையை அறிந்துக் கொண்டு ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சாதி சங்கங்கள், அரசியல் கட்சிகள், பத்திரிகைகள், சோஷியல் மீடியா (யூடிப், வாட்ஸ் அப்) தொலைக்காட்சி போன்ற பல்வேறு அமைப்பின் தகவல்களை ஓரிடத்தில் அமர்ந்துக் கொண்டு மாநிலத்திற்கு மாநிலம் தனது முகவர்களை பணிக்கு அமர்த்தி (ஏஜெண்ட்) அவர்களுக்கு போதிய வசதிகளை செய்துக் கொடுத்து கூடவே ஊதியமும் வழங்கி மாநிலத்திற்கு மாநிலம் இருக்கும் புள்ளிவிரவங்களை சேகரித்து, மக்கள் தொகைக்கு ஏற்ப தனது கருத்துக்களை தயாரித்து மக்கள் உடைய மனோநிலையை குறிப்பு அறிந்து தங்கள் தேவைக்கு ஏற்ப எந்த அரசியல் கட்சியுடன் ஒப்பந்தம் செய்துக் கொள்கிறாரோ அந்த அரசியல் கட்சியை பலப்படுத்துவதும்.

அந்த அரசியல் கட்சியின் நிர்வாகிகளை பலம் மற்றும் பலகீனம் கட்சி தொண்டர்களின் மனநிலை இவைகளுக்கு ஏற்ப வேலை திட்டத்தை உருவாக்கி கட்சி தலைமைக்கு குறிப்பு ஆணை வழங்கி, அதை நடைமுறைப்படுத்தவதும் ஒப்பந்தம் செய்துக் கொண்ட கட்சிக்கு எதிராக இயங்கி வரும் எதிர்கட்சிகளின் தகவல்களையும், தொண்டர்களின் மனநிலையும் கண்டறிந்து அவர்களுக்கு ஏற்றதொரு குறிப்புகளை தயாரித்து மறைமுகமாக எதிர்கட்சிகளை பலகீனப்படுத்துகின்ற பணியில் தனது முகவர்களை உள்ளே புகுத்தி பல்வேறு கோணங்களில் எதிர்கட்சிகளை பிரித்து, அவர்கள் வாக்கு வங்கியை சிதறடித்து வாக்களர்கள் இடத்தில் ஒரு குழப்பத்தை உருவாக்கி, கருத்துக் கணிப்பு என்ற போர்வையில் பல்வேறு விதமான மறைமுக உறவுகளை ஏற்படுத்தி ஒப்பந்தம் செய்து பலகீனமான ஒரு கட்சியை ஒப்பந்தம் செய்துக் கொண்டு அந்த கட்சியை ஆட்சியில் அமருவதாக விளம்பரப்படுத்தி அதற்கு போதிய தொகையை பெற்றுக் கொண்டு தனது ஏஜெண்ட்டுகள் மூலம் மக்கள் மனதில் ஒருவிதமான நம்பிக்கையை ஏற்படுத்தி  அதன் மூலம் பல இடங்களில் வெற்றியை தீர்மானிக்கும் ஒரு சக்தியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு அரசியல் கீங் மேக்கராக இந்தியாவில் வலம் வந்து கொண்டிருக்கும் ஐபேக் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் சு0சு4 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றி குறித்து அதை எவ்வாறு சாத்தியப்படுத்துவது என்று ஆலோசித்து வருகிறார். 

இவர் தற்பொழுது எடுத்திருக்கும் புதிய அவதாரம் மத்தியில் ஆளும் பாஜக கட்சிக்கு எதிராகவும் பிரதமர் மோடியை வீழ்த்திக் காட்டுவதாகவும் அதற்கு ஏற்ற மாற்று சக்தியை ஈடுபட்டு வருகிறார். 

இந்த புதிய அவதாரத்தில் அவர் வெற்றி பெறுவாரா? அல்லது எல்லைக்கோட்டின் அருகிலே வந்து தோல்வியை தழுவாரா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. 

இவர் கடந்த காலங்களில் குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திரமோடி அவர்களை இந்திய பிரதமர் ஆக்குவதற்கும், பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் வெற்றிபெறுவதற்கும் மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பேனர்ஜி வெற்றி பெறுவதற்கும் தமிழ்நாட்டில் திமுக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றிப்பெறுவதற்கும் ஒப்பந்த அடிப்படையில் வியூகம் வகுத்து அதை நடைமுறைப்படுத்தி அதில் வெற்றி கண்டவர் என்று கூறப்படுகிறது.  இவர் இப்பொழுது மோடிக்கு எதிராக ஒரு அணியை உருவாக்குவதற்காக மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து காங்கிரஸ் கட்சியையும் இணைத்துக் கொண்டு மோடி ஆட்சியை மாற்றி காட்டுவதாக சவால் விடுகிறார். இதற்காக இவர் மேற்கொள்ளும் முயற்சிகளின் மிக முக்கியமானவை தமிழ்நாட்டில் திமுக, தெலுங்கானாவில் சந்திரசேகராவ், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி, ஓடிசாவில் நவீன்பட்நாயக், மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் சிவசேனா கட்சி தலைவர் உத்வேப் தாக்குரே, உத்திரப்பிரதேசத்தில் அகிலேஷ்யாதவ் இவைகளை ஒருங்கிணைத்து அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியை இணைத்து மோடியின் ஆட்சியை மாற்றுவதற்கான முதல் கட்ட முயற்சியை மேற்கொண்டு வருகிறார். 


இதற்காக பல்வேறு மாநிலத்தில் நிலவும் தட்பவெட்ப நிலையும் கண்டறிந்து தனது ஐபேக் நிறுவனத்தின் மூலம் மாநில கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கி மாநில கட்சிகளை பலப்படுத்தி ஒருங்கிணைந்த தேசிய கட்சியை உருவாக்குவதற்கு முயற்சு வருகிறார். இந்த முயற்சியில் இவர் எவ்வாறு வெற்றிப்பெற போகிறார் என்பது தான் இப்பொழுதைய கேள்வியாக உள்ளது. இவரது முயற்சியை முறியடிப்பதற்காக பாஜக கட்சியும் பல்வேறு கோணங்களில் புதிய உத்திகளை தயாரித்து மீண்டும் மத்தியில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்கின்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பிரசாந்த்கிஷோர் அவர்கள் கருத்து கணிப்பும் அவரது நிறுவனமாக ஐபேக் நிறுவனமும் சு0சு4 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக் குறித்து திட்டமிட்டு செயலாற்றுகின்றது. ஒருவேளை இந்த முயற்சியில் பிரசாந்த்கிஷோர் தோல்வி அடைவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறமுடியாது. 


காரணம் மாநில கட்சிகளும், தங்களை வளர்த்துக் கொள்வதில் முழு கவனம் செலுத்தி வருவதால் தேசிய அளவில் ஒரே திசையில் பயணம் செய்யும் என்று உறுதி கூறமுடியாது. ஆகவே இவரது முயற்சி தோல்வியில் முடியலாம்-.


- டெல்லிகுருஜி