ஆன்மீகச் செம்மல் செ.ராஜேந்திரன் (I.A.S.) (R)- திரைப்படத் தயாரிப்பாளர் G.N. அன்புச்செழியன் இல்லத் திருமணவிழா! ஆன்மீகச் சான்றோர்கள் முன்னிலையில் நடைபெற்றது!




மங்களகரமான பிலவருடம் மாசி மாதம் 9-ம் தேதி (21.2.2022) திங்கட்கிழமை பஞ்சமி திதியும் சித்திரை நட்சட்சத்திமும் சித்திலோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.00 மணிக்குமேல் 10.30 மணிக்குள் மேஷ லக்னத்தில் ஆன்மீகச் செம்மல் திரு. செ. ராஜேந்திரன் I.A.S. (R) திருமதி. ரா. சரஸ்வதி அம்மாள் ஆகியோரின் புதல்வன் திருநிறைச்செல்வன் ரா.ஷரண், திரைப்படத் தயாரிப்பாளர் G.N.அன்புசெழியன் திருமதி அ.ராஜேஸ்வரி ஆகியோர் புதல்வி திருநிறைச்செல்வி அ.சுஷ்மிதா ஆகியோரின் திருமண விழா திருவான்மியூர் ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் சிறப்பாக நடைபெற்றது

இத்திருமணத்தில் ஆன்மீகச் சான்றோர்கள், அறிஞர் பெருமக்கள், அரசியல் பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள், திரையுலகப் பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், வியாபார பெருமக்கள், பத்திரிகையாளர்கள், ஊடக பெருமக்கள் மற்றும் பலர் ‑கலந்துகொண்டு வாழ்த்தினர்.