கச்சத்தீவு பிரச்சனை இலங்கை அரசு
திடீர் அறிவிப்பு!
அதிர்ச்சியில் தமிழக இலங்கை மீனவர்கள்…!!இந்திய கடல் பகுதியில் இருந்த கச்சத்தீவு பகுதி தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை தூக்கிய நிறுத்திய ஒரு பகுதியாக விளங்கியது. இராமேஸ்வரம், கோடியக்கரை மீனவர்கள் இந்திய கடற்பகுதியில் மீன் பிடிப்பதற்காக படகுகளில் சென்று வாரக் கணக்கில் தங்கியிருந்து மீன் பிடிப்பதற்கு ஏற்றவகையில் கச்சத்தீவு திடல் இருந்து வந்தது பல ஆண்டுகளுக்கு முன்பு அந்தோணிய படையாட்சியார் என்பவர் அங்கு அந்தோணியர் ஆலயத்தை உருவாக்கினார். அந்த ஆலயத்தின் ஆண்டு விழா ஆண்டுதோறும் மிக சிறப்பாக நடைபெற்று வந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து மீனவர்கள் குடும்பம் குடும்பமாக சென்று அந்தோணியாரை வழிப்பட்டு வந்தனர். அதே போல் இலங்கையில் உள்ள மீனவர்களும் அந்தோணியார் கோயிலுக்கு வந்து பொங்கலிட்டு வந்தது வழக்கமாக இந்தது. பு980க்கு பிறகு இலங்கையில் விடுதலை புலிகளின் ஆதிக்கம் அதிகரித்தப் போது தனி ஈழம் கேட்டு வடகிழக்கு மாநிலத்தை ஒருங்கிணைத்து இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த காலகட்டத்தினால் இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு செல்வது முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டது. அன்றிலிருந்து இந்திய கடலோர காவல்படையின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வந்த நிலையில் அந்தோணியார் கோவில் தரிசனத்திற்கு செல்லும் தமிழ்நாட்டு மீனவர்களும், பொதுமக்களும் அதிக அளவில் சென்று வருவதற்கு மத்திய அரசு பாதுகாப்பு நன்மையை கருதி சில கட்டுப்பாடுகளை விதித்து கூட்டம் கூடுவதையும் விழாக்களில் பங்கேற்பதையும் கட்டுப்படுத்தி வந்தது.

இந்த நிலை இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டப் பிறகு கட்டுப்பாடுடன் கூடிய அந்தோணியார் திருவிழாவிற்கு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு கொரனா பெரும் தொற்றை காரணம் காட்டி அந்தோணியார் கோவில் விழாவில் இருநாட்டு மீனவர்களும், பொதுமக்களும் பங்கேற்பதற்கு இலங்கை அரசு திடீரென்று தடை விதித்துள்ளது. இது குறித்து இலங்கை அமைச்சர் டக்லஸ் தேவநந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ஆண்டு இருநாட்டு மக்களும் அந்தோணியார் கோவில் விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முற்றிலும் தடை விதித்திப்பதாகவும் புனித தோமையார்களை மட்டும் வைத்துக் கொண்டு விழா நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இது தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களுக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆண்டவரை தரிசப்பதற்கும், ஆலயம் தரிசனம் செய்வதற்கும் அரசாங்கம் தடை போடுவது எத்தகைய நடவடிக்கை என்பதை பொதுமக்கள் புரிந்துக் கொள்ள முடியாமல் புலிம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த காலத்தில் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் பிரதமர் இந்திராகாந்தி அவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப கட்சத்தீவு கடல் பகுதியை இலங்கை அரசுக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் முதல்வராக ஜெயலலிதா இருந்த பொழுது கட்சத்தீவை மீட்பதற்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். ஜெயலலிதா மறைவிற்குப் பின் ஆட்சியில் இருந்து முதல்வர்கள் ஜெயலலிதாவின் கோரிக்கையை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டுவிட்டார்கள். தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். தந்தை கருணாநிதி விட்டுக் கொடுத்த கட்சத்தீவை மகன் மு.க.ஸ்டாலின் மீட்டெடுப்பாரா? என்ற கேள்வி எழுகிறது.

இந்திய இலங்கை ஒப்பந்தப்படி தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதற்கும் கட்சத்தீவில் தங்கியிருந்து தங்கள் வலைகளை உலர்த்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது அந்த அனுமதியும் மறுக்கப்பட்டு தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதும், சிறைப்பிடிக்கப்படுவதும் எதிர்பாராமல் நடந்துக் கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதுடன் மீன் பிடி தொழிலை தொடர்ந்து நடைபெறுவதற்கு கச்சத்தீவு ஒரு பெரும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது. அதற்கும் இலங்கை அரசு இந்த ஆண்டு அந்தோணியார் ஆலயத்திற்கும் தடைவிதித்துள்ளது என்பது வருத்தமளிக்கும் செயலாகும். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் கட்சத்தீவிற்குள் நுழைவதற்கு இந்திய மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் நிரந்தர தடை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

- டெல்லிகுருஜி