மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஒவ்வொரு கட்சிகளும் பிடித்த வார்டுகள் எண்ணிக்கை விவரம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றிய நிலையில் நகராட்சி, பேரூராட்சிகளிலும் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளன.
சென்னை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தி.மு.க. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என மூன்றிலும் வெற்றிகளை குவித்து வருகிறது.
மதியம் 3 மணி வரையில் 1374 மாநகராட்சிகளுக்கான வார்டுகளில் 584-ல் அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தி.மு.க. 411 வார்டுகளில் வெற்றிவாகை சூடியுள்ளது. அ.திமு.க. 73 வார்டுகளிலும், காங்கிரஸ் 40 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜனதா 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
3843 நகராட்சி வார்டுகளில் 1 வார்டில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 8 பேர் போட்டியின்றி வெற்றி பெற்றனர். தற்போது வரை 2920 வார்டுகளில் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தி.மு.க. 1796 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 487 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜனதா 46 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
7621 பேரூராட்சிகளுக்கான வார்டுகளில் இதுவரை 7266 வார்டுகளுக்கு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. 4 இடங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 196 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டனர். தி.மு.க.வினர் 4257 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். அ.தி.மு.க. 1176 இடங்களிலும், காங்கிரஸ் 327 இடங்களிலும், பா.ஜனதா 192 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.