உள்ளாட்சி தேர்தல் குறித்து
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது..!




இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் எவ்வாறு வெற்றிப் பெற வேண்டும் என்று ஆலோசனைகளை திமுகவினர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுரை வழங்குகிறார். வெற்றி ஒன்றே இலக்காக நினைத்து போட்டியிடுகின்ற அனைத்து இடங்களிலும் திமுக வெற்றிப்பெற வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் தோழமை கட்சிகளோடு கலந்து ஆலோசித்து அவர்கள் கோரிக்கையை பரிசீலித்து கூட்டணி கட்சிக்கு கொடுக்க வேண்டிய இடங்களை ஒதுக்கீடு செய்து தருமாறு கேட்டுக் கொள்வதுடன் கடந்த எட்டு மாத கால திமுக ஆட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார்.


- டெல்லிகுருஜி