11 கல்லூரிகள் மூலம் தமிழர்கள் சாதனை படைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது- அண்ணாமலை பெருமிதம்

மக்களின் உயிர் காக்கும் மருத்துவக்கல்வியை மேம்படுத்தவும், எதிர் கால இந்தியாவை நோயற்ற இந்தியாவாக வழிப்படுத்தவும், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின், மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரிகள் என்ற மகத்தான பிரதமரின் திட்டத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசின் பங்களிப்பில் புதிதாக பதினோரு மருத்துவ கல்லூரிகள் தமிழ் நாட்டில் புதிதாகத் திறக்கப்படுகின்றன.

இந்தியாவின் எந்த மாநிலத்திலும், ஒரே நேரத்தில் பதினோரு புதிய மருத்துவ கல்லூரிகள், இதுபோல திறக்கப்பட்டதாக, இதுவரை நம் நாட்டில் எந்த வரலாறும் இல்லை. இந்தச் சாதனையை, போற்றுதலுக்குரிய நம் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், தமிழ்நாட்டில் படைத்திருக்கிறார். என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சிக்குரிய செய்தி.

ரூ.4 ஆயிரம் கோடி மொத்த செலவில், மத்திய அரசின் ரூ.2145 கோடி பங்களிப்பில், விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம், மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.

இதன் மூலம் தமிழ் நாட்டில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 26-ல் இருந்து 37ஆக உயர்கிறது.

அரசு மருத்துவ கல்லூரியின் மாணவர் சேர்க்கைக்கான இடங்களில் புதிதாக 1, 450 சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படுகின்றன. தமிழகத்திற்கு தற்போது இந்த புதிய மருத்துவக் கல்லூரிகள் கிடைத்திருக்கும் கூடுதல்

மாணவர் சேர்க்கை இடங்கள் மூலம், இனி அரசு பள்ளி மாணவர்கள் நாளை அரசுப்பணிமருத்துவர்களாக, புதிய சாதனை படைக்க தந்திருக்கிறார், பிரதமர் மோடி அரிய வாய்ப்பை உருவாக்கித் மோடி அவர்களின் இந்த மகத்தான சாதனையால், மருத்துவ மாணவர் சேர்க்கையில், தமிழக மாணவர்களுக்கு இனி கூடுதல் இடம் கிடைக்க வாய்ப்பளித்து இருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மக்களின் சார்பில் பா.ஜ.க. சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், மத்திய அரசு சார்பில் மூன்று தளங்களைக்கொண்ட புதிய அலுவல் வளாகத்தினையும் பிரதமர் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கிறார் தேசத்தை முன்னிறுத்தி தமிழ் நேசத்தை வெளிப்படுத்தும் பிரதமர் கரத்தை வலுப்படுத்துவோம். தமிழர்களாகிய நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய தருணம் இது.