சிறையில் ராஜேந்திரபாலாஜி
அதிர்ச்சியில் உள்ளார்!     முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல நாட்களாக பதுங்கி இருந்த அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இருந்து வேறு இடத்திற்கு தப்பி செல்லும் பொழுது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது கைது விவகாரத்தை அதிமுக அரசியல் ரீதியாக அணுகாமல் சட்ட ரீதியாக அணுகுவோம் என்று கூறியிருப்பது முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று அலைந்து திரிந்த ராஜேந்திரபாலாஜி உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துவிட உச்சநீதிமன்றத்தில் மனு நிலுவையில் இருக்க இடைப்பட்ட காலத்தில் கைது செய்யப்பட்டார். இவரது கைதுக்கு ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் பெயரளவிற்கு ஒரு அறிக்கையை விட்டு ஒதுங்கிக் கொண்டார்கள். பதுங்கி வாழ்ந்த ராஜேந்திரபாலாஜியை பாஜகாவை சேர்ந்த சில நபர்களும் அதிமுகவை சேர்ந்த சில நபர்களும் அடைக்கலம் கொடுத்ததுக்காக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


நீதிமன்ற காவலில் சிறையில் இருக்கும் ராஜேந்திரபாலாஜியை காவல்துறை தனது கட்டுப்பாட்டில் விசாரணைக்கு எடுத்து விசாரிக்க முயற்சி செய்யும் பொழுது தான் என்ன சொல்லுவார் ராஜேந்திரபாலாஜி என்ற எதிர்பார்ப்பு அதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.


- டெல்லிகுருஜி