உள்ளாட்சி தேர்தல் வெற்றி யாருக்கு?


 “புலி வருது புலி வருது” என்று சொல்லி புலி வந்த கதையாக உள்ளாட்சி தேர்தல் வருகிறது வருகிறது என்று இப்பொழுது நகர்மன்ற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்-19 ஆம் தேதி வாக்கு பதிவும் பிப்-22 ஆம் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 21 மாநகராட்சி மேயர் பதவிகளும், 138 நகராட்சி தலைவர் பதவியும், 490 பேரூராட்சிகள் பதவிகளுக்கும் பொது தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 24 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை தள்ளிவைக்கப்பட்டது. அதன் பின் இரண்டு கட்டங்களாக 9 மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு அதில் பெரும்பான்மையான இடங்களை திமுக கைப்பற்றியது. இதனை தொடர்ந்து ஜன 31 ஆம் தேதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்த நிலையில் ஜன 27 ஆம் தேதி நகர்மன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் தலைவர்களை தேர்ந்தெடுப்பதும், மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மறைமுக தேர்தல் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்கட்சி கணக்குப்போட்டு கொண்டிருக்கும் தருணத்தில் ஆளுங்கட்சியான திமுக அனைத்து இடங்களையும் கைப்பற்றி மக்களின் நன்மதிப்பை பெறுவதற்காக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்று என்ற அச்சமும் எதிர்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் எதிர்கட்சியான அதிமுக தரப்பில் நம்பிக்கையோடு தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிகார ஆர்வமுடன் அதிமுகவினர் விண்ணப்பம் செய்து பார்க்கும் பொழுது நகர்மன்ற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக ஒரு மாபெரும் வெற்றியை பெறவேண்டும் என்று கணக்கு போடுகிறது. இதற்கு ஏற்றாற்போல் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரமாக ஈடுப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர்செல்வம் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

திமுகவை பொறுத்தவரை நாடாளுமன்றம் சட்டமன்றம் இரண்டிலும் போட்டியிட்ட கூட்டணி கட்சிகளுடன் ஒன்றுப்பட்டு நகர்மன்ற உள்ளாட்சி தேர்தலை சந்திக்கின்றது. ஆனால் அதிமுகவை பொறுத்தவரை பாஜக கட்சியை தவிர பெயர் சொல்கின்ற அளவிற்கு கூட்டணி கட்சிகள் இல்லை என்ற நிலையில் தேர்தலை சந்திக்க இருக்கின்றது. சுபு மாநகராட்சிகளில் குறைந்தது 5 அல்லது 6 இடங்களை பாஜக கட்சி கேட்க கூடும். அதே போன்று 138 நகராட்சிகளில் குறைந்தது 50 இடங்களையாவது பாஜக கட்சி கேட்க கூடும். 490 பேரூராட்சிகளில் 60 அல்லது 70 இடங்களை பாஜக கட்சி கேட்க கூடும். வேறு வழியில்லாமல் அதிமுக பாஜக கட்சி கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அவர்கள் கேட்கின்ற இடங்களை கொடுத்து நகர்மன்ற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க கூடிய கட்டாயத்துக்கு தள்ளப்படலாம்.

ஆனால் இரண்டு கட்சிகளும் எந்த அளவிற்கு வெற்றி பெற முடியும் என்பதை கணித்து கூற முடியாத அளவிற்கு இருப்பதால் கோயம்புத்தூர், வேலூர், கடலூர், சேலம், ஈரோடு, திருப்பத்தூர் போன்ற மாநகராட்சிகளை அதிமுக கைப்பற்றுவதற்கு திட்டமிட்டு வருகிறது. ஒருவேளை மறைமுக தேர்தல் என்பதால் தேர்தல் முடிந்தப் பிறகு தொகுதி உடன்பாடு ஏற்பட்டால் ஒருசிலர் மேயர் பதவிகளை வாய்ப்பிருந்தால் பாஜக கட்சிக்கு அதிமுக ஒதுக்கீடு செய்யலாம். திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேயர் பதவியும், விடுதலை சிறுத்தைகளுக்கு ஒரு மேயர் பதவியும் ஒதுக்கீடு செய்து முன்வரலாம். மற்றப்படி நகராட்சி, பேரூராட்சிகளில் மிக குறைந்த அளவிலேயே இடங்களை ஒதுக்கீடு செய்து அதிக இடங்களை திமுக தக்கவைத்துக் கொள்கின்ற முயற்சியில் ஈடுபடலாம். ஆக மொத்தம் இந்த உள்ளாட்சி தேர்தல் என்பது பாமக கட்சிக்கு மிகப் பெரிய அளவில் இழப்பையும், சரிவையும் ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால் வன்னியர் வாக்குகள் அதிமுகவிற்கு அதிகளவில் விழுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.

காரணம் 10.5 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்கியது அதிமுக அரசு என்றும், அதிமுக அரசு வழங்கிய உள் இட ஒதுக்கீட்டை திமுக அரசு பெற்றுத்தரவில்லை என்ற கோபமும், திமுக ஆட்சிக்கு வந்தப் பிறகு சென்னை உயர்நீதிமன்றம் 10.5 சதவிகிதம் சட்டம் செல்லாது என்று அறிவித்தப் பிறகு அரசு தரப்பில் முறையாக வாதாடவில்லை என்பததால் சட்டம் ரத்து செய்யப்பட்டது என்ற குற்றத்திற்கு திமுக ஆளாவதால் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுகவிற்கு வாக்களித்த வன்னியர்கள் இந்த தேர்தலில் அதிகளவில் அதிமுக அணிக்கு வாய்ப்பளிக்க வாய்ப்பு ஏற்படக்கூடும். ஆளுங்கட்சி என்ற தகுதியின் அடிப்படையில் அதிக இடங்களை கைப்பற்றுவதற்கு முயற்சிக்கும் திமுக.

- டெல்லிகுருஜி