தமிழ்நாட்டில் நடந்த குடியரசு தினவிழாவில் வன்னிய தியாகிகள் படம் இடம்பெறவில்லை வன்னியர்கள் வறுத்தம்!


டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டு சார்பில் ஊர்தி இடம் பெறாமல் அனுமதி மறுப்பதை கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழ்நாட்டை புறக்கணித்து தமிழர்களை அவமதித்தாக தமிழ் அறிஞர்களும், புலவர்களும், அரசியல்வாதிகளும், மத்திய அரசின் அறிக்கைக்கு எதிராக குரல் எழுப்பி கண்டனத்தை பதிவு செய்தார்கள். மேலும் விடுதலை போராட்ட வீரர்களான ஜான்சிராணி, மருதுசகோதர்கள், மகாகவி பாரதியார், வ.உ.சி போன்றோர் படங்களை தாங்கிய ஊர்தியை குடியரசு தின விழாவில் பங்கேற்காமல் தடைசெய்து விட்டார்கள் என்று புலம்பினார்கள். மத்திய அரசுக்கு எதிராக போர்க்குரல் எழுப்பினார்கள். தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். பல கோணங்களில் விமர்சனம் செய்தார்கள். தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது என்று மத்திய அரசின் மீது புழுதிவாரி தூற்றாத குறைாக புலம்பினார்கள். போராட்டமும் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் திராவிட கழகம் கீ.வீரமணி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் வைகோ போன்றவர்கள் பங்கேற்று மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தனிப்பெரும் சமுதாயமான வன்னியர் சமுதாயம் குடியரசுதின விழா அணிவகுப்பில் பங்கேற்ற தமிழ்நாட்டு ஊர்தியில் தமிழ்நாட்டில் நடைபெற்ற பேரணியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர், திருப்பூர் குமரன், பெருந்தலைவர் காமராஜர், தீரன் சின்னமலை, மருது சகோதரர்கள், வ.உ.சி., கன்னியமிகு காகியிதமில்லத், ஜான்சிராணி, பாரதியார், ராஜாஜி போன்ற பல்வேறு சமுதாய தலைவர்களின் உருவங்கள் பொதித்த வாகனம் தமிழ்நாட்டில் நடைபெற்ற அணிவகுப்பின் போது இடம்பெற்ற அந்த வாகனத்தில் பெரும்பான்மை சமுதாயமான வன்னிய சமுதாயத்தை ஆயிரக்கணக்கான விடுதலை போராட்ட வீரர்களின் ஒருவர் படம் கூட சிலை கூட இடம் பெறாமல் இருந்தது இந்த மக்களின் மனதை பெருமளவில் பாதிப்புக்குள்ளானதோடு வேதனையில் ஆழ்த்தியது என்று வன்னியர்கள் புலம்புகிறார்கள். மேலும் தமிழக அரசு வன்னியர்களை புறக்கணிக்கிறது என்று விமர்சனம் செய்வதை கூட தவிர்க்கிறார்கள். ஆனால் திமுக ஆட்சியில் சமூக நீதி இடஒதுக்கீடு போன்றவற்றை குறித்து பேசுவார்களே தவிர ஆனால் வன்னியர்களுக்கு எதிராகவே திமுக அரசு செயல்படுகிறது என்று குற்றம் சுமத்துகிறார்கள் வன்னியர்கள் இருந்தாலும் திமுகவிற்கு வாக்களித்து 10.5 சதவிகிதம் உள்இடஒதுக்கீடு வழங்கிய அதிமுகவை புறக்கணித்து திமுகவை ஆட்சியில் அமர்த்தினார்கள். இருந்தாலும் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாட்டில் நடந்த வாகன ஊர்வலத்தில் எல்லா சமுதாய தலைவர்களின் படமும் இடம் பெற்றிருந்த பொழுது வன்னிய சமுதாயத்தை சார்ந்த தியாகிகளின் படம் இடம்பெறவில்லை என்று குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளவேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் இருப்பதால் இந்த தகவலை நினைவுப்படுத்தும் கவன ஈர்ப்பாக இப்படி ஒரு செய்தியை வெளியிட வேண்டும் என்று பல தரப்பினர்களும் எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக வன்னிய இளைஞர்கள் சோஷியல் மீடியா மூலம் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு பல தகவல்களை பகிர்ந்துக் கொள்கிறார்கள். அதில் ஒன்று தான் இதுவும். குறைந்தபட்சம் தியாகி கவிச்சிங்கம் அர்த்தநாரிஸ்வர வர்மா, கடலூர் தியாகி அஞ்சலையம்மாள், சர்தார் ஆதிகேசவ நாயக்கர், கடலூர் ராமசாமி படையாட்சியார், வேலூர் மாணிக்கவேல் நாயக்கர், நாகப்ப படையாட்சி போன்றவர்களின் புகைப்படத்தில் ஏதாவது ஒன்று இடம் பெற்றிருந்தால் ஆறுதலாக இருக்கும்.  


- டெல்லிகுருஜி