பிப்.1 முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் அமைச்சர் பொன்முடி அறிவிப்பு


   



தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சம் தொட்டுள்ள நிலையில் அனைத்து கல்லூரிகளுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்த அறிவிப்பு ஒன்றை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 20-ம் தேதிக்குள் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும். 

ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் நடத்திய பாடங்களில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும். ஆன்லைன் தேர்வு முறையில் முறைக்கேடுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கிராமப்புற மாணவர்கள் அப்லோட் செய்த விடைத்தாள்கள் வந்து சேர்வதற்கு தாமதமானாலும் பெற்றுக்கொள்ளப்படும்.

இறுதி செமஸ்டர் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆப்லைன் மூலமாக கண்டிப்பாக தேர்வுகள் நடத்தப்படும். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இறுதி தேர்வர்களுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

கொரோனா குறைந்த பிறகே நேரடி வகுப்புகள் நடத்தப்படும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.