சாதிகள் வாரியாக வாக்குகள் பிரிவதால் உத்திரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்தனார் வெற்றியை பாதிக்காது! இரண்டாம் இடத்தை பிடிக்க நினைக்கும் அகிலேஷ் யாதவ் - மாயாவதி தனி அணிகள் மூன்றாவது இடத்தை பிடிக்குமா காங்கிரஸ் கட்சி!







உத்திரப்பிரதேசம் சட்டமன்ற தேர்தல் முடிவை பொறுத்தவரை மீண்டும் பாஜக கட்சிக்கு சாதகமாகவே, தற்பொழுது வரை இருந்து வருகிறது. இதற்கு ஆதரமாக முதல்வர் யோகி ஆதித்தனார் சுற்றுப்பயணத்தின் பொழுது மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதற்கு அடுத்தப்படியாக முலாய்சிங் அகிலேஷ்யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சிக்கு கூட்டம் கூடுகிறது. மூன்றாவதாக பகுஜன்சமாஜ் கட்சி மயாவதிக்கும், நான்காவதாக காங்கிரஸ் கட்சிக்கு கூட்டம் கூடுகிறது. சமீபத்தில் பாஜக கட்சியில் இருந்து அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் விலகினாலும் கூட முதல்வர் யோகி ஆதித்தனாருக்கு ஆதரவு நிலையில் உள்ள வாக்காளர்களை அவர்களால் பிரிக்க முடியவில்லை என்பது கள நிலவரத்தின் மூலம் தெரியவருகிறது. குறிப்பாக உத்திரப்பிரதேசத்தை பொறுத்தவரை கிழக்கு, மேற்கு என்று இரண்டாக பிரித்தாலும் கிழக்கு உத்திரப்பிரதேசத்தில் இந்துக்கள் வாக்குகளை ஒட்டுமொத்தமாக பாஜக கட்சி பெறக்கூடும் குறிப்பாக தற்போதைய முதல்வர் யோகி ஆதித்தனார் ஐந்துமுறை கொரக்பூர் மக்களவை தொகுதியில் இருந்து வெற்றிப் பெற்றுள்ளார்.

மேலும் கொரக்பூர், வாரணாசி, அயோத்தி ஆகிய பகுதிகள் கிழக்கு உத்திரபிரதேசத்தில் இணைந்து இருப்பதால் அந்தப் பகுதி பாஜக கட்சிக்கு செல்வாக்கு மிக்க பகுதியாக விளங்குகிறது. மேலும் இதற்கு வலுசேர்க்கின்ற வகையில் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் வாரணாசி மக்களவை தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்பது தான். இதற்கு அடுத்தப்படியாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுவருவதும் பாஜக கட்சியில் முக்கிய அஜண்டாவில் இடம்பெற்றுள்ள ராமர் கோவில் விவகாரம் இது மொத்த மக்கள் தொகையான 20 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையில் 79.7 சதவிகிதம் பேர் இந்துக்களாக உள்ளனர் என்பது தான். மீதமுள்ள 19.2 சதவிகிதம் இஸ்லாமியர்களாகவும், ஒரு சதவிகிதம் போர் கிறிஸ்துவ, சிக்கிய, புத்த மதத்தை பின்பற்றுபவர்களாகவும் இருப்பது தான் (2011 ஆம் ஆண்டு மதவாரியாக கணக்கெடுப்பின் படி) இந்த புள்ளி விவரம் குறிப்பிடப்படுகிறது.

கிழக்கு உத்திரப்பிரதேசம் பொறுத்தவரை பீகார், ஜார்கண்ட் மாநில மக்களின் வாழ்வாதாரத்தோடு ஒத்துப்போக கூடிய வாழ்க்கை முறை பெறுமளவில் இருந்து வருகிறது. இதுவும் பாஜக கட்சிக்கு வலிமையை கூட்டுகிற ஒரு செய்தியாகவே பார்க்கப்படுகிறது. இருந்தாலும் பீகாரில் பாஜக கூட்டணி அமைச்சரவையில் முதல்வராக பதவி வகிக்கும் நித்திஷ்குமார் உத்திரப்பிரதேச தேர்தலில் கூட்டணி இன்றி தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். ஒருவேளை இது பாஜக கட்சி வாக்கு வங்கியை பிரிப்பதற்கு பயன்படலாம். இருந்தாலும் கிழக்கு உத்திரப்பிரதேசத்தை பொறுத்தவரை பாஜக கட்சி வாக்கு வங்கி மற்ற கட்சிகளோடு ஒப்பிட்டு பார்க்கும் பொழுது கடந்த கால வரலாறை திரும்பி பார்க்கும் பொழுது மிக சிறிய அளவில் மட்டுமே சேதாரம் ஏற்படலாம் மற்றப்படி மிகப் பெரிய அளவில் முதல்வர் யோகி ஆதித்தனார் சட்டமன்ற தேர்தலில் அதிகளவில் பாஜக கட்சி வெற்றிப்பெறும் வாய்ப்பு உள்ளது.

மேற்கு உத்திரப்பிரதேசத்தை எடுத்துக்கொண்டால் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநில மக்களின் வாழ்க்கை முறையோடும், கலாச்சாரத்தோடும் பொருளாதார ஏற்றத்தாழ்வோடும் ஒத்துப்போக கூடிய வாழ்க்கை முறை இருந்து வருகிறது. முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி இருப்பவர்கள் அதிகளவில் இந்த பகுதியில் உள்ளனர். குறிப்பாக காசியபாத், ஆக்ரா ஆகிய இரண்டு முக்கிய நகரங்களில் அதிகளவில் இஸ்லாமியர்களின் வாக்குகள் உள்ளன. இந்தப் பகுதியை பொறுத்தவரை கடந்த முறையை விட இந்த முறை பாஜக கட்சிக்கு பெரிய அளவில் சந்திக்கக் கூடிய அபாயம் உள்ளது. குறிப்பாக சாதிகள் வாக்குகள் உத்திரப்பிரதேசத்தில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்திகளாக இருப்பதினால் ஆதிக்க சாதியினர் 25% வினரும், ஒபிசி பிரிவில் 35 சதவிகிதனரும், எஸ்.சி.எஸ்.டி. 20 சதவிகிதனரும், இஸ்லாமியர் 16 சதவிகிதனரும் உள்ளனர். இதில் பிராணமர்கள் மற்றும் ஆதிக்க சாதியினர் (தாக்கூர்) 17 சதவிகிதம் பேர், வைசியர்கள் 5 சதவிகிதம் பேர், இஸ்லாமியர்கள் 16 சதவிகிதம் பேர், ஒ.பி.சி.பிரிவினர் 39 சதவிகிதம் பேர் மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் 3 சதவிகிதம் பேர். ஆதிக்க சதவிதனர் ஒபிசி 39 சதவிகினரும் மொத்த 64 சதவிகிதம் பேரில் 40 முதல் 55 சதவிகிதம் பாஜக கட்சிக்கு வாங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது. மீதமுள்ள 50 சதவிகித வாக்குகளை முலாய்சிங்க யாதவ், சமாஜ்வாஜ் கட்சி, மாயாவதி கட்சியான பகுஜன்சமாஜ்வாஜ் கட்சி, மற்றும் காங்கிரஸ் கட்சி மூன்றும் சேர்ந்து தனித்தனியாக போட்டியிடுவதால் 20 சதவிகிதம், 15 சதவிகிதம் என்ற அடிப்படையில் வாக்குகளை பிரித்துக் கொண்டால் எதிர்பார்த்த வெற்றியை பாஜக கட்சி வெற்றியை சுலாபமாக அடைவதற்கான வாய்ப்பு மிகப் பெரிய அளவில் காணப்படுகிறது. பிராமணர்களை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியை விட்டு முழுவதுமாக வெளியேறி பல ஆண்டுகள் ஆகிறது. இதற்கு உதாரணமாக மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்ட ரிட்டா பகுகுணா காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்துவிட்டார். மேலும் சல்மான் குாஷி அவர்களை காங்கிரஸ் முன்னிறுத்தி தேர்தலை சந்தித்த பொழுது கடந்த காலங்களில் முஸ்லீம் சமுதாய வாக்குகளை காங்கிரஸ் கட்சிக்கு விழாமல் போய்விட்டது. இதே போல் மாயாவதி தனித்து தேர்தலை சந்திப்பதால் கடந்த முறை பெற்ற வாக்குகளை விட இந்த முறை எஸ்.சி.எஸ்.டி வாக்குகளை மிக குறைந்த அளவே பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியால் பெறமுடியும். இப்படி முக்கோண நிலையில் சமாஜ்வாஜி கட்சி, காங்கிரஸ், பகுஜன்கட்சி, திரிசங்கு நிலையில் தேர்தலை சந்திப்பதால் மிகப் பெரிய அளவில் சட்டமன்ற தொகுதி எண்ணிக்கையை பெறுவது கடுமையான காரியமாகும். ஆகவே பாஜக கட்சி வெற்றி என்பது மீண்டும் உத்திரப்பிரதேச ஆட்சியை கைப்பற்றும் அளவிற்கு உயர்ந்த எண்ணிக்கையில் வெற்றிப்பெறும் வாய்ப்பு உள்ளது என்று கூற முடியும். இதுமட்டும் அல்ல முதல்வர் யோகி ஆதித்தனார் பதவியேற்றதினில் இருந்து சாதி, இனம் பார்க்காமல் ரவுடிகளையும், கட்டப்பஞ்சாயத்து பேர்வழிகளையும் அடக்கி ஒடுக்கி, பெண்கள் அச்சமின்றி வாழ்வதற்கும் பயமின்றி தொழில் செய்வதற்கும், தொழிற்சாலை அமைவதற்கும் முக்கிய பங்காற்றியுள்ளார்.

இவை தவிர மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களும் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த சத்திரிய வகுப்பை சார்ந்தவர் என்பதால் சத்திரியர்களின் கூடுதல் வாக்குகளை பெறுவதற்கு பாஜகவுக்கு உதவிக்கரமாக இருக்கும். ஓ.பி.சி பிரிவை எடுத்துக்கொண்டால் அதை பல வகையாக பிரிக்கலாம். யாதவர்கள் 7 சதவிகிதம், மௌரிய சமூகத்தை சேர்ந்தவர்கள் 5 சதவிகிதம், குர்ஷி 2 சதவிகிதம், நிஷாத் சு சதவிகிதம், லோகி 3 சதவிகிதம், ஜாட் சு சதவிகிதம் இவை தவிர மற்றவர்கள் 13 சதவிகிதம் பேரும் எஸ்.சி.எஸ்.சி பிரிவில் ஜாதவ் பிரிவில் 10 சதவிகிதம், பார்சில் 4 சதவிகிதம் மற்றவர்கள் 6 சதவிகிதம்.மொத்தத்தில் இஸ்லாமியர்கள் சு9 சதவிகிதமும், ஜாதவ் சமுதாயத்தை சார்ந்தவர்கள் 12 சதவிகிதமும் மேற்கு உத்திரப்பிரதேசத்தில் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர். அதே போல் கிழக்கு உத்திரப்பிரதேசத்தில் யாதவ் சமூகத்தினர் 10 சதவிகிதம் பேரும், குர்ஷி சமூகத்தினர் 8 சதவிகிதம் பேரும் வெற்றிவாய்ப்பை தீர்மானிக்க கூடியவர்களாக இருக்கிறார்கள்.

பாஜகவின் இலக்கு 60 சதவிகித வாக்கு வங்கிகள் தான். மத்திய உத்திரப்பிரதேசத்தில் பிராமணர்கள் 13 சதவிகிதம் பேர் இருப்பதால் அவர்கள் வாக்கு மிகவும் முக்கிய வாக்குவங்கியாக விளங்குகிறது. இவர்கள் எந்த கட்சியை ஆதரிக்கிறார்களோ அந்த கட்சியே ஆட்சி அதிகாரத்தில் அமருவது உறுதியாகிறது. பாஜக கட்சியே முதலிடத்தில் உள்ளது. இதற்கு உதாரணமாக 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவு மாயாவதி கட்சிக்கு சாதகமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய கள நிலவரப்படி பிராமணர்களை பொறுத்தவரை இரண்டு காரணங்களுக்காக பாஜக கட்சி ஆதரிக்க கூடும். ஒன்று இந்துதூவா கொள்கை, தேசப் பாதுகாப்பில் சமரசம் இல்லாமல் பிரதமர் மோடி செயல்படுகிறார் என்பதாகும். இவை தவிர முதல்வர் யோகி ஆதித்தனார் தாகூர் சமூகத்திற்கு பெரும்பாலான சலுகைகளை செய்ததால் ஒரு சில பிராமணர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இதை சரி கட்டும் விதமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி வந்த ஜித்தின்பிரசாதா வருகை பிராமணர்களின் அதிருப்தியை சரிகட்டிவிடும் என்கிறார்கள்.

சாதி, மதம், மொழி, இவைகளை முன்னிறுத்தி உத்திரப்பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு ஒவ்வொரு கட்சியும் முயற்சி செய்தாலும் பாஜக மத்திய ஆட்சியில் இருப்பதால் விவசாயிகள் பிரச்சனை, விலைவாசி உயர்வு, தனியார் மயமாக்கல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமிர்ஷாவின் அரசியல் நடைமுறைகள் போன்றவற்றால் ஏற்பட்டுள்ள அதிருப்தியும் உத்திரப்பிரதேசத்தில் செல்வாக்கை குறைத்தாலும் முதல்வர் யோகி ஆதித்தனார் அதிரடி நடவடிக்கைகளும் உள்ளூர் மக்களின் பாதுகாப்பை கருதி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் செயல்களும் அதிருப்தியையும், எதிர்பையும் கலந்து பாஜக கட்சிக்கு வெற்றியை பெற்றுதரும் அளவிற்கு உத்திரப்பிரதேச மாநில தற்போதைய கள நிலவரம் அமைந்துள்ளது.

உ.பியை பொறுத்தமட்டில், எந்த கட்சி 35 சதவிகிதம் வாக்குகளை தாண்டிப் பெற்றுவிட்டாலே, ஆட்சியை கைப்பற்றிவிடும் என்ற நிலைதான் இன்றைக்கு. அகிலேஷ் யாதவின் கட்சிக்கு 30 சதம் ஒட்டுக்கள் வரை கிடைக்கும். பகுஜன்சமாஜ் கட்சிக்கு 20 சதம் வாக்குகள் கிடைக்கலாம். ஜாதி கணக்குகள் எந்த கட்சிக்கு சாதகமாக அமையப்போகிறது? மார்ச் 10 தெரிந்துவிடும்.

- டெல்லிகுருஜி