எம்.ஜி.ஆர் பார்முலாவை கையில் எடுக்கிறார் சசிகலா நடராஜன்!




ஒரு காலத்தில் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டப் பொழுது அதை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்களில் முதன்மையானவராக கருதப்படுபவர் சசிகலாநடராஜன் அவர்கள். இதற்கு ஏற்றாற்போல் தனது ஆதரவை வழங்கி தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீண்டும் ஒன்றுப்பட்ட அதிமுகவுக்கு கிடைக்க செய்தவர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ்காந்தி அவர்கள். இந்த முயற்சி வெற்றி அடைய வேண்டும் திரை மறைவில் இருந்து பணியாற்றிய நடராஜன் என்பது கடந்த கால வரலாறு-. மீண்டும் வரலாற்று நிகழ்வை நடைமுறைப்படுத்துவதற்கு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் சசிகலா. 


ஆட்சி, அதிகாரம், பதவி, பணம் இவை நான்கையும் ஒப்படைத்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி அதிமுக ஆட்சியை பாதுகாப்பாக அமைத்து கொடுத்து விட்டு சிறைக்கு சென்ற சசிகலா 4 ஆண்டுகள் கழித்து சிறைவாசம் முடித்து திரும்பிய பிற-கு தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி இழந்து நிற்கிறது என்பதை பார்த்து துன்பமும், துயரமும் உற்றார். இதற்கு யார் காரணம் என்று ஆராயாமல் தனக்கு எதிராக பின்னப்பட்ட அரசியல் வலை அறுத்தெறிந்து மீண்டும் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியை அமைய வேண்டும் என்பதற்காக அரசியலிருந்து விலகுவதாக அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தவிர்த்தார். எங்கே மீண்டும் அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக் கொண்டால் தங்கள் பதவி பறிபோய்விடும் என்றும் முதல்வர் நாற்காலியில் அமர முடியாமல் போகும் என்ற சூழல் உருவாகிவிடும் என்றும் எடப்பாடி பழனிசாமியும் தலைமை பதவி தன் கையை விட்டு பறிப்போய் விடும் என்ற அச்சத்தில் ஒ.பன்னீர்செல்வமும் இரட்டை நிலையில் இருவரும் அதிமுகவை வழிநடத்தவேண்டும் என்று கருதி சசிகலாவை கட்சியில் சேர்ப்பதை இருவரும் விரும்பாமல் இவர்கள் விருப்பதிற்கேற்ப கட்சியின் மூத்த நிர்வாகிகளையும் நினைத்துக் கொண்டு ஆட்சியை இழந்தப் பிறகும் கட்சியை வழிநடத்துவதற்கு முடிவெடுத்து இரட்டை தலைமையின் கீழ் அதிமுகவை வழிநடத்தி வருகிறார்கள் யாரை நம்பி கட்சியையும், ஆட்சியையும் ஒப்படைத்து விட்டு சிறைக்கு சென்றாரோ அவர் இன்று சசிகலாவுக்கு எதிராக செயல்பட்டாலும் அவருக்கு ஆதரவான நிலையை எடுத்து தன்னையும், தன்னை  பாதுகாத்துக் கொள்கின்ற ஒ.பன்னீர்செல்வமும் தங்களை தலைவர்களாகவே அறிவித்துக் கொண்டார்கள்.


எக்காரணம் கொண்டும் சசிகலாவை கட்சியில் சேர்ப்பதற்கு வாய்ப்பில்லை என்று முடிவெடுத்து செயல்படும் ஒ.பி.எஸ்., ஈ.பி.எஸ் பாஜக கட்சியில் நிழலில் நின்றுக் கொண்டு மீண்டும் அதிமுக ஆட்சியை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் பாஜக கட்சியோ ஒன்றுப்பட்ட அதிமுகவை உருவாக்குவதற்கு பல முயற்சிகள் மேற்கொண்டும் ஒரு முயற்சியும் பலன் அளிக்காத வகையில் இருப்பதால் தமிழ்நாட்டில் தங்கள் கட்சியை வலுப்படுத்தும் விதமாக தமிழ் மாநில பிரிவிற்கு அண்ணாமலை அவர்களை பாஜக கட்சியின் தலைவராக நியமித்து அதிமுக வாக்கு வங்கியை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சியை மேற்கொள்வதோடு ஆளுங்கட்சியான திமுகவின் எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்கும் பணியையும் பாஜக கட்சியே முன்னெடுத்து செல்லுகின்ற வகையில் தமிழ்நாட்டில் வியூகம் அமைத்து செயல்படுங்கள் என்று டெல்லி மேலிடம் தமிழ்நாட்டு தலைமைக்கு கட்டளையிட்டு இருக்கிறது.


ஒரு வகையில் பார்த்தால் அதிமுக பலகீனம் அடைவது திமுகவுக்கு லாபம் தரும் செய்தியாகவும் இன்னொரு வகையில் பார்த்தால் பாஜக கட்சியின் வளர்ச்சிக்கு உதவும் விதமாகவும் அமைந்துவிடும் என்ற அரசியல் கணிப்பை புரிந்துக்கொண்ட சசிகலா அவர்கள் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக பகைத்து கொள்ளாமலும் மாநிலத்தை ஆளும் கட்சியான திமுகவின் எதிர்ப்பை தவிர்க்கும் விதமாகவும் அரசியல் ராஜதந்திர முறையோடு அதிமுக செல்வாக்கை இழந்துவிடக் கூடாது என்று கருதி ஒன்றுப்பட்ட அதிமுகவை உருவாக்கி மீண்டும் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருகின்ற ஒரு புதிய முயற்சியில் தன்னை ஈடுப்படுத்திக் கொள்ள  ஆலோசித்து வருகிறார் சசிகலா நடராஜன். இதற்காக அவர் இந்த முயற்சி வெற்றிப்பெறுவதற்காக கடந்த காலங்களில் தான் செய்த தியாகத்தை விட எதிர்காலத்தில் எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராகி வருவதாகவும் தான் இருக்கும் வரை அதிமுகவில் இன்னொரு பிளவு (டிடி தினகரன்) ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக கவனமாக இருந்து வருகிறார்.


கொரனாவின் தாக்கம் குறையும் பொழுது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசியல் நிகழ்ச்சி தவிர்த்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதிமுகவிற்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட போவதாக நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் கூறுகின்றன. இதற்காக அவர் மேற்கொள்ளப் போகும் அஸ்திரம் தான் எம்.ஜி.ஆர், ராஜீவ்காந்தி, பார்முலா. காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரு பிரிவினரும் மற்ற சிறு சிறு அரசியல் கட்சிகளும் சில சமுதாய அமைப்புகளும் அதிமுகவில் உள்ள பெரும்பான்மை ஆதரவும் இதன் மூலம் சசிகலா அவர்களுக்கு கிடைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக டெல்லி வட்டார தகவல் கூறுகின்றது. ஒருவேளை பாஜக கட்சி தன் விருப்பப்படி ஒன்றுப்பட்ட அதிமுகவை உருவாக்கதற்கான முயற்சியில் ஈடுபட்டு சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள அழுத்தம் கொடுத்தாலும் அதையும் மனபூர்வமாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் தற்போது சசிகலா தனது அரசியல் முடிவை எடுப்பதற்கு காத்திருப்பதாக கூறப்படுகிறது.


திருப்பத்தூர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி அமைத்திருந்தாலும் அதிமுக அந்த கூட்டணியை ஆதரித்தது போல் சசிகலா ஒரு கூட்டணியை உருவாக்கினால் அந்த கூட்டணி பல கட்சிகளை ஆதரிக்கும் நிலை உருவாகும் சூழல் தமிழ்நாட்டில் வரலாம். அதன் மூலம் மீண்டும் சசிகலா தனது அரசியல் பயணத்தை தொடரலாம். திமுகவிற்கு மாற்று சக்தியாக மீண்டும் அதிமுகவே ஆட்சி அமைக்கலாம். இதற்கு சசிகலாவின் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவைப்படலாம். காலத்தின் முடிவிற்காக காத்திருப்போம். சசிகலாவின் புதிய வியூகம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


- டெல்லிகுருஜி