நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான நெறிமுறைகள் வெளியீடு


   




நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான நெறிமுறைகள் வெளியீடு

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

சென்னை:


தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

இதையடுத்து உள்ளாட்சி தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடிகளில் காய்ச்சல் பரிசோதனை, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காகாணிக்க மாவட்ட, உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒருங்கிணைப்பு சுகாதார அதிகாரி நியமிக்கப்படுவார்.

வேட்பாளர்கள் அதிகபட்சமாக 3 ஆதரவாளர்களுடன் சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட வேண்டும். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட வேர்பாளர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட அனுமதி இல்லை.