தமிழ்நாட்டில் மாநகராட்சி தேர்தலும் இடஒதுக்கீடு அறிவிப்பும்!
தலித் மக்களை முன்னிலைப்படுத்துகிறது திமுக!! பெண்களுக்கு 11 மேயர் பதவி!!

 “யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே” என்ற பழமொழிக்கேற்ப மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் தேதி அறிவிப்பு வரும் முன்பாக மேயர் பதவிக்கான இடஒதுக்கீடும், கவுன்சிலர் பதவிக்கான இடஒதுக்கீடும் தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுகிறது. இதில் தமிழ்நாட்டின் தலைநகராக விளங்கும் சென்னை மாநகராட்சி மற்றும் தாம்பரம் மாநகராட்சி பட்டியலின பெண்களுக்கும், ஆவடி பட்டியலின (பொது) மூன்று மேயர் பதவிகளும் பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதில் சென்னை மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி இரண்டும் பட்டியலின பெண்களுக்கும், ஆவடி பட்டியலினத்தை சேர்ந்த ஆண், பெண் இருபாலரும் போட்டியிட தலைநகரை சுற்றியுள்ள பட்டியலினத்தை சார்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது வரவேற்க தகுந்த ஒன்று என்றாலும் பொதுவாக தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் வசிக்கும் பிற சமுதாயத்தை சார்ந்தவர்களும் பட்டியலினத்தை சேர்ந்தவர்களும் தொழில்துறை, வேலைவாய்ப்பு, கல்வி போன்றவற்றின் மூலமாக தலைநகர் சென்னையில் அதிகளவில் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பெரும்பான்மையான மக்கள் பட்டியலின வகுப்பை சாராதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை மாநகராட்சி தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து இதுவரையில் பட்டியலினத்தை சார்ந்த ஒருவர் மாநகராட்சி மேயராக வரவில்லை என்ற குறைப்பாடு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. என்றாலும் இப்படி ஒரு வாய்ப்பு பட்டியலினத்தவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கடந்த காலங்களில் விடுதலை சி-றுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தமிழக அரசுக்கும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கும் தனது கோரிக்கையை முன்வைத்தார் என்பதும் இந்த தருணத்தில் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒன்றாகும். இந்த நிலையில் சென்னை மாநகராட்சி தாம்பரம் மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி மூன்று மாநகராட்சி மேயர் பதவிகளும் பட்டியலினத்தை சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது திருமாவளவனுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். அதே நேரம் சமூக நீதியை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்துவரும் சிலர் இது குறித்து தங்கள் கருத்துக்களை வேறுவிதமாக பதிவிடலாம். இருந்தாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் உள்ள ஆட்சியும் இந்த தேர்தல் அறிவிப்பையும் பட்டியலினத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதையும் எதிர்த்து குரல் எழுப்புவதில் அர்த்தமில்லை என்றே கூறவேண்டும். ஒருவேளை இந்த முயற்சி ஒருவகையில் சாதி ஒழிப்பு நிலையை முன்னிலைப்படுத்தும் சில அமைப்புகளுக்கு மகிழ்ச்சியை தரலாம். அதே நேரத்தில் பட்டியலினத்தை சாராத பல சாதி அமைப்புகளும் பல சமுதாய பொதுமக்களும் இந்த அறிவிப்பை குறித்து பல வழிகளில் தங்கள் கருத்துக்களை பதிவிடலாம். குறிப்பாக சென்னை மாநகராட்சி பட்டியலினத்தவருக்கு வழங்கப்பட்டிருந்தாலும் தாம்பரம் ஆவடி இரண்டும் பொதுப்பட்டியலில் அறிவித்து பட்டியலினத்தை சாராத ஆண், பெண் இருபாலரும் போட்டியிடக் கூடிய மாநகராட்சி மேயர் பதவிக்கான அறிவிப்பாக வெளியிட்டிருக்கலாம் என்று எண்ணக் கூடும்.

சென்னை மாநகராட்சியில் சு00 கவுன்சிலர்கள் இருந்தாலும் பட்டியலினத்தை சார்ந்த பொது கவுன்சிலர்கள் பு6 எண்ணிக்கையும், பெண்கள் பிரிவில் பு6 எண்ணிக்கையும், பொதுவாக பெண்கள் 84 ஆக மொத்தம் பு00 வார்டுகள் பெண்களுக்கு என்றும் கூடுதலாக பு6 வார்டுகள் பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு என்றும் மொத்தம் புபு6 இடங்கள் ஒதுக்கீட்டு முறையில் சென்றுள்ளது. 84 வார்டுகள் பொது வேட்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவை தவிர கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிப்புரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய மாநகராட்சிகள் பொதுப் பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதே போல் கொடைக்கானல், தாராப்புரம், நாமக்கல், மானாமதுரை, நரசிங்கப்புரம், புஞ்சைபுளியாம்பட்டி, ஒட்டன்சத்திரம், ஜெயங்கொண்டம், திட்டக்குடி, உளுந்தூர்பேட்டை போன்ற நகராட்சி தலைவர் பதவிகள் பட்டியலினத்தை சார்ந்த பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜோலார்பேட்டை, துறையூர், களக்காடு, மாங்காடு, கூடலூர், மேட்டூர், திருப்பத்தூர், திருவள்ளூர், பொன்னேரி, ஆகிய நகராட்சி தலைவர் பதவிகள் எஸ்.சி. பிரிவு பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. நெல்லியாளம் நகராட்சி தலைவர் பதவி எஸ்.டி. பிரிவு பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை, கூத்தாநல்லூர், அதிராம்பட்டினம், ராசிப்புரம், குன்னூர், திருவாரூர், ஊட்டி, முசிறி, திருத்துறைப்பூண்டி, செங்கோட்டை, பள்ளப்பட்டி, வாலாஜாப்பேட்டை, நெல்லிக்குப்பம், பேரணாம்பட்டு, சீர்க்காழி உள்ளிட்ட 58 நகராட்சி தலைவர்கள் பதவிகள் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதே போல் சோலூர் தேவர் சோளா பேரூராட்சி தலைவர் பதவிகள் பெண்களுக்கும், கிள்ளைப் பேரூராட்சி எஸ்.டி பொதுப்பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேசூர், மருதூர், வாலாஜாபாத், தலைஞாயிறு உள்ளிட்ட 43 பேரூராட்சி தலைவர் பதவிகள் எஸ்.சி. பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

செந்தாரைப்பட்டி, நடுவட்டம், கோம்பை, அரும்பாவூர் உள்ளிட்ட 4சு பேரூராட்சி தலைவர் பதவிகள் எஸ்.சி பட்டியலின பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவினாசி, வள்ளம், ஐயம்பேட்டை, சோழபுரம், உள்ளிட்ட சு00 பேரூராட்சி தலைவர் பதவிகள் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்று நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் சிவதாஸ் மீனா (ஐ.ஏ.எஸ்) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதை பார்க்கும் பொழுது மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழகம் முழுவதும் கொண்டு வந்த பெரியார் சமத்துவப்புரம் திட்டம் நினைவுக்கு வருகிறது. அதையும் மிஞ்சுகின்ற வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த உள்ளாட்சி தேர்தலில் செய்துள்ள சீர்திருத்தம் கவுன்சிலர் வார்டு ஒதுக்கீடு பதவி பிரிப்பு போன்றவற்றில் பட்டியலினத்தை சேர்ந்த பொது வேட்பாளர்களுக்கும் பட்டியலினப் பெண்களுக்கு கூடுதல் இடங்களையும் பொதுப்பிரிவு பெண்களுக்கு என்று சில தொகுதிகளையும், ஒதுக்கீடு செய்திருப்பது ஒரு அற்புதமான திட்டமாக இருந்தாலும் இதை எதிர்த்து எந்த இயக்கங்களும் குரல் எழுப்பினால் அந்த இயக்கம் பட்டியலினத்தவருக்கு எதிரான இயக்கமாகவும், பெண்களுக்கு எதிராக குரல் எழுப்புகின்ற இயக்கமாகவும் அடையாளப்படுத்துகின்ற அளவில் இருப்பதினால் இதற்கு எந்தவிதமான எதிர்ப்பு குரலும் தெரிவிக்கமாட்டார்கள் என்று நம்பலாம்.

ஒரு வகையில் பார்த்தால் அரசாங்க அலுவலங்களில் ஆண்களே அதிக அளவில் அரசின் கோட்புகளை கையாண்ட நிலைமாறி ஆண்களுக்கு நிகராக பெண்களும் அரசாங்க அலுவலக கோப்புகளை கையாளுகின்ற முறைக்கு திமுக கழக அர-சு முதல்வர் மு.க.ஸ்டாலின் சீர்திருத்தம் செய்துள்ளார் என்றே எடுத்துக்கொள்ளலாம்.
எந்த வகையில் பார்த்தாலும் உள்ளாட்சி நிர்வாக மன்றத்தில் ஆண்களின் ஆதிக்கம் குறைக்கப்பட்டிருக்கிறது என்றாலும் அல்லது குறைக்கப்பட்டிருந்தாலும் இது எந்தவகையிலும் ஆண்களை வேதனைப்படுத்தாது என்று ஆட்சியாளர்கள் நினைக்க கூடும்.

“Power to Poor" Poor to Power"

என்ற மண்டல் நாயகன் மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் விருப்பத்தையும் இந்த அறிவிப்பு நிறைவேற்றி உள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம். மேல்தட்டு மக்களும் அடித்தட்டு மக்களும் வாக்களிப்பதை தவிர வேறென்ன செய்யமுடியும் என்ற கேள்வி எழுகிறது. அதே நேரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாளவன் அவர்கள் கோரிக்கைப்படிப் பார்த்தால் தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு அரசியல் சட்ட இடஒதுக்கீட்டையும் தாண்டி வாய்ப்புகள் அதிக அளவில் வழங்கப்படுவது வெகு விரைவில் பட்டியலினத்தவர் அரசின் அதிகார மையத்தை தலைமை பொறுப்பையும் முன்னேறுவதற்கு இந்த அறிவிப்பு அடித்தளமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அரசியல் ஆண்கள் அதிர்ச்சியடைய வேண்டாம்.

- டெல்லிகுருஜி