தமிழ்நாடு காங்கிரசுக்கு
விரைவில் புதிய தலைவர்!


தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஏ.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என்று கடந்த ஓராண்டாக டெல்லி தலைமைக்கு படையெடுத்துக் கொண்டிருந்த தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளும் முன்னாள் தலைவர்களும் எப்பொழுது மாநில தலைமை மாற்றப்படும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். கூட்டு தலைமை நான்கு பேர் கொண்ட செயற் தலைவர்களையும் நியமித்து கட்சியை சிறப்பாக வழிநடத்துவார்கள் என்று அறிவித்தது டெல்லி தலைமை. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி வளர்வதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. ஆனால் காங்கிரசின் மூத்த நிர்வாகி பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கு சிறுபான்மை நலத்துறை வாரிய தலைவர் பதவியை கொடுத்து கட்சிதமாக காங்கிரஸ் நிர்வாகிகளை திமுக கழகம் தனக்கு சாதகமான ஒரு நிலையை எடுத்துக் கொண்டது. ஆகவே தமிழ்நாட்டுக்கு புதிய தலைவர் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்படலாம். புதிதாக நியமிக்கப்படுபவர் பட்டியலில் டாக்டர் விஷ்ணுபிரசாத், கார்த்திக் சிதம்பரம், ஜோதிமணி எம்.பி., டாக்டர் செல்லக்குமார் ஆகியோர் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்கள். இவர்களில் ஒருவர் விரைவில் நியமிக்கப்படலாம். நாடாளுமன்றம் தேர்தல் வருவதற்கு இரண்டு ஆண்டுகள் இருப்பதினால் அந்த வாய்ப்பு அடுத்து வரக்கூடிய தலைவர்களுக்கு வழங்கப்படும். காரணம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒரு தலைவரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை நீடிக்க விடுவதில்லை. அதே போல் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருக்கும் தலைவர்கள் மேல் புகார் கூறுவது என்பது வழக்கமாக இருப்பதால் மாற்றம் உறுதி.


- டெல்லிகுருஜி