கண்ணீர் அஞ்சலி!     






இந்திய திருநாட்டின் முப்படைகளுக்கும் தளபதியாக இருந்து நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்திய பிபின் ராவத் முப்படைகளில் முதல் தளபதி சத்திரிய வம்சத்தில் மாவீரன் பிபின் ராவத் மரணம் என்பது ஏற்க முடையாத ஒன்று. இயற்கையாக நடைபெற்றதா? அல்லது இயந்திர கோளாரா? வேறு ஏதேனும் பின்னணியில் இருக்கின்றதா என பல்வேறு கோணங்களில் புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிபின் ராவத் மரணம் இந்திய பாதுகாப்புத் துறையே ஆழ்ந்த துயரத்தில் கண்ணீரையும் வரவழைத்து உள்ளது. குறிப்பாக வடநாட்டை சேர்ந்த முக்கிய தலைவர்கள், முதலமைச்சர்கள் கண்ணீர் விட்டு அழுகின்ற காட்சியைப் பார்க்கும் பொழுது தென்னிந்திய சத்திரியர்களும் தங்கள் குடும்பத்தில் ஒருவர் அகால மரணம் அடைந்துவிட்டார் என்று எண்ணி கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறார்கள். மனிதர்களுக்கு மரணம் வரலாம். போர் வீரர்களுக்கு மரணம் என்பதே இல்லை என்பது வரலாறு என்றாலும் இதுபோன்ற மரணங்கள் இனி எக்காலத்திலும் நடைபெற கூடாது என்பதே தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்யமுடியும். 


சாலை போக்குவரத்தில் நடைபெற்ற மரணம் அல்ல வான் வெளி பயணத்தில் ஏற்பட்ட துயரம். இந்த துயரத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தேம்பி தேம்பி அழுதுக் கொண்டிருக்கிறார் உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தனார். அதை காண்போர் இதயங்களை துயரத்தில் ஆழ்த்துகிறது. பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்களும் பிரதமர் மோடி, அமிர்ஷா போன்றோர்களும் அதிர்ச்சி துயரத்தில் இருந்து மீளாத தருணத்தில் இந்திய தேசத்தின் சொத்தை நாம் பறிகொடுத்து விட்டு நிற்கின்றோம். இவரது மரணம் தீவிரவாதத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது. பாதுகாப்புதுறைக்கு உத்வேகத்தை வழங்கி புதிய உத்வேகங்களை பாதுகாப்பு துறையில் புகுத்தி தீவிரவாதத்திற்கும், தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தவர் பிபின் ராவத். இவரது மரணத்தை சாதரணமாக எடுத்துக்கொண்டு ஒரு விபத்தாக கருதி இருந்துவிட முடியாது. இருந்துவிடவும் கூடாது. உண்மை நிலையை கண்டறிந்து உரிய முறையில் விசாரணை செய்து உண்மை தன்மையை அறிந்து நாட்டு மக்களுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டியது இந்திய அரசாங்கத்தினுடைய கடமையாகும். 


உலகமே உற்றுநோக்குகிறது இவரது மரணத்தை. எப்படி நடந்தது நடக்க கூடாத ஒன்று. எப்படி நிகழ்ந்தது. எதனால் விபத்து ஏற்பட்டது என்பதை அறிந்துக் கொள்ள உலகமே உற்றுநோக்குகிறது.


இதுபோல் எத்தனையோ ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டது என்றாலும், இந்த விபத்து சொல்லனா துயரத்தில் இந்திய மக்களை ஆழ்த்தியுள்ளது. இனிவரும் காலங்களில் இந்திய பாதுகாப்பை பலப்படுத்தி இதுபோன்ற விபத்துகளும் வேறு எந்தவித விபத்துகளும் நடைபெறாத வண்ணம் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 


இந்திய குடிமக்கள் அனைவரும் பிபின் ராவத் மற்றும் அவருடன் சிக்கி மரணமடைந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் செலுத்துவதே முப்படைகளுக்கும் நாம் செலுத்தும் ஆறுதலாகும்.


& டெல்லிகுருஜி