அன்புமணியின் ஆவேச பேச்சும்
ராமதாசின் எச்சரிக்கையும்!




2026-ல் பாமக ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும். ஆனால் முதலமைச்சர் என்ற பதவி, ஆசை, வெறி எனக்கில்லை (அன்புமணி ராமதாஸ்). தமிழ்நாட்டை முன்னேற்ற வேண்டும் என்பதற்காகவே தமிழ்நாட்டில் பாமக கட்சி ஆளவேண்டும் என்பதே எங்கள் இலக்கு. ஒருமுறை அதிகாரம் நம்மிடம் கிடைத்தால் நாட்டில் உயர்ந்த மாநிலமாக உயர்த்தலாம் என்று பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் சிறப்புரையாற்றியுள்ளார். ஆனால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக ஐந்து ஆண்டுகள் அன்புமணி ராமதாஸ் பதவியில் இருந்த பொழுது மருத்துவ இடஒதுக்கீட்டில் தலித்துகளுக்கு இடம் கேட்டபொழுது அதற்கான கையெழுத்தை நான் தான் போட்டேன் என்றும் சமூக நீதிக்காக குரல் கொடுப்பதில் பாமக கட்சி நாட்டினிலே முதலிடம் வகிக்கிறது என்றாலும் அருந்ததியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்றால் கிடைத்துள்ளது. முஸ்லீம்களுக்கு இடம் கிடைத்துள்ளது. ஆனால் வன்னியர்களுக்கு கிடைக்க வேண்டிய 10.5 சதவிகிதம் நீதிமன்றத்தின் மூலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஒரு கட்சி கூட பதில் பேசவில்லை. அதே போல் கடந்த ஆட்சியில் மற்ற எல்லா கட்சிகளும் அதை வரவேற்கவில்லை. குறிப்பாக தற்பொழுது ஆளும்கட்சியும் இதற்கு முன்பு ஆண்ட கட்சியும் மதுரை உயர்நீதிமன்றம் கிளை இடஒதுக்கீட்டை ரத்து செய்த பொழுது அதற்கு ஆதரவாக எந்தவித குரலும் எழுப்பவில்லை, உயர்த்தவில்லை என்பது நமக்கு கவலை அளிக்கக் கூடிய ஒரு விஷயமாகும்.


நாம் ஆள வேண்டும் தமிழ்நாட்டை அப்பொழுது தான் நாம் நினைத்ததை நிறைவேற்ற முடியும். பல திட்டங்கள் நாங்கள் வைத்துள்ளோம். அவற்றையெல்லாம் வெளியில் சொல்ல இயலாது. அதே நேரம் 10.5 சதவிகிதம் மேல்முறையீட்டு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது. இதில் தமக்கு சாதகமான தீர்ப்பை தாங்கள் பெறுவதற்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். அதில் வெற்றிப்பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஒருவேளை நமக்கு பாதகமான பதில் வந்தால் அரசியல் ரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்துச் சென்று 10.5 சதவிகிதம் என்பதை அடைந்தே தீருவோம், பெற்றே தீருவோம் இது நமது உரிமை. ஆகவே நீங்கள் பட்டிதொட்டிகளிலெல்லாம் சென்று பாமக கட்சி வளர்ச்சிக்கும், பாமக கட்சி ஆட்சியில் அமர்வதற்கும் கடுமையாக உழைக்க வேண்டும். திண்ணை பிரச்சாரத்தில் தொடங்கி கிராமங்கள் தோறும் சென்று சமுதாய மக்களிடம் நேரில் சென்று பாமக கட்சியை ஆதரிக்க வேண்டும் என்று அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும்.


கடந்த 40 ஆண்டு காலமாக வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீட்டு போராடி வரும் பாமக கட்சி நாடார்களுக்கு பிரச்சனை என்றாலும், முஸ்லீம் மக்களுக்கு பிரச்சனை என்றாலும், கிறிஸ்துவர்களுக்கு பிரச்சனை என்றாலும், தலித்துகளுக்கு பிரச்சனை என்றாலும் முதலில் குரல் எழுப்புகின்ற இயக்கம் பாமக கட்சி. ஆனால் பு0.5 சதவிகிதம் இடஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்த பொழுது எந்த அரசியல் கட்சியும் எந்த சமுதாயம் அமைப்பும் பாமக கட்சிக்கு ஆதரவாக குரல் எழுப்பவில்லை. ஆகவே வரும் காலத்தில் பாமக கட்சி தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற குரலை வன்னியர் வசிக்கும் பட்டிதொட்டிகளிலெல்லாம் சென்று பிரச்சாரத்தை தொடங்கி மக்களிடத்தில் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தி தனித்து நின்று வெற்றிப்பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நீங்கள் எடுக்க வேண்டும் இதுதான் மருத்துவர் அய்யாவின் செயல் திட்டம்.


தொலைநோக்கு பார்வையில் மருத்துவர் ஐயா அவர்கள் சிந்திக்க கூடியவர் அதற்கேற்றார்போல் திட்டங்களை வகுத்து செயலாற்ற கூடியவர் என்பதை மனதில் வைத்துக் கொண்டு பாட்டாளிகளின் எதிர்கால நன்மைக்காக வன்னியர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி ஒட்டு அளிப்பதற்கான கட்சியாக மாற்ற வேண்டும். நம் கட்சியில் உள்ள இளைஞர்களை போல் வேறு எந்த கட்சியிலும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் நம்மிடம் அதிகாரம் இல்லையே தவிர மற்ற அனைத்தும் நம்மிடம் இருக்கிறது. தமிழ்நாட்டில் தனிபெருன்பான்மையான வன்னிய சமுதாயம் அடுத்தவர்களுக்கு சோறுபோடுவதற்காக உழைக்கின்றது. வீடு கட்டி கொடுப்பதற்காக கூலிவேலை செய்கிறார்கள். ஆனால் அவர்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னேறுவதற்கு தனிஇடம் வேண்டும் என்றால் கொடுக்க மறுக்கிறார்கள். இதில் என்ன நியாயம் என்றால் அதற்கு பதில் சொல்ல யோசிக்கிறார்கள்.


கடந்த காலங்களில் பல கூட்டணிகளை அமைத்து பார்த்து விட்டோம். ஆனால் ஒரு கூட்டணிலும் நமக்கு முன்னேற்றதிற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. சு0சு6 ல் நடக்கு சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாமக ஆட்சி அமைய வேண்டும் என்று மருத்துவர் ஐயா விரும்புகிறார். இதற்கு வன்னியர்கள் மத்தியில் ஒற்றுமை உணர்வை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால் நம் ஆட்சி தமிழ்நாட்டில் நிலைத்து இருக்க முடியும். சட்டப்படி நமக்கு கிடைக்க வேண்டிய பு0.5 சதவிகிதம் கிடைப்பதற்காக நாம் தொடர்ந்து உழைத்து வருகின்றோம். தவறும் பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை மூலம் வன்னியர் உள்ஒதுக்கீடை பெற்றே தீருவோம் என்று ஆவேசமாக பேசிய அன்புமணி ராமதாஸ் பாமக தொண்டர்களையும், தலைவர்களையும் உற்சாகப்படுத்தினார். கட்சியில் இரண்டு நிலை அதிகாரம் என்பதை மாற்றி மாவட்ட செயலாளர்களுக்கே கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்பதற்காக மாநில பொதுச்செயலாளர் பதவிகளையெல்லாம் கட்சியில் இல்லை என்ற நிலை அவற்றையெல்லாம் களைக்கும் அறிவிப்பை வெளியிட்டார் மருத்துவர் ஐயா.


ஆகவே மாவட்ட செயலாளர்களுக்கு தான் முழு அதிகாரம் கட்சியில் வழங்கப்படும் நிலை உருவாகும். இளைஞர்களுக்கு வழிவிட்டு வயதானவர்கள் கட்சி பதவியில் இருந்து விலகி கொண்டு கட்சி பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த ஆண்டு நமக்கு மிக முக்கியமான ஆண்டு சு0சுபு  காரணம் பு0.5 தனிஒதுக்கீடு வழங்கியதும் இந்த ஆண்டு தான். அதை ரத்து செய்ததும் இந்த ஆண்டு தான். உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததும் இந்த ஆண்டு தான் ஆகவே இந்த ஆண்டு நமக்கு மிக மிக முக்கியமான ஆண்டாகும். இடஒதுக்கீட்டை எப்படி பெறவேண்டும் என்பது அடுத்தகட்ட நடவடிக்கையாக மாறும். அதற்கு என்ன வழி என்பதை நாங்கள் திட்டமிட்டப்படி நாங்கள் ஆட்சி பதவி எடுப்போம் என்பதை சூளுரைத்திருக்கிறார். தற்போது பாமகவு-க்கு டெல்லியில் ஒரு இடமும், தமிழ்நாட்டில் 5 சட்டமன்ற பதவியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பொதுக்குழுவின் மூலம் பாமக கட்சி வழங்கியுள்ள செய்தி இனி எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்பதையும் பாமக கட்சியை தலைமை ஏற்றுக்கொண்ட  கூட்டணி அமைத்துக் கொள்வோம் என்று பிரகடனப்படுத்தி கொண்டார்கள். 


ஆனால் கடந்த காலங்களிலும் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட்டிருந்தாலும் தேர்தல் கால சூழ்நிலையை கருதி திமுக, அதிமுக என்ற இரு கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து வரலாறு உண்டு. ஆனால் எதிர்வரும் நகர்மன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் 2026 சட்டமன்ற தேர்தல் எத்தகைய நிலையை எடுக்கப்போகிறோம் என்பதை இப்பொழுது அறிவித்திருந்தாலும் முடிவகளில் மாற்றலாம் வரலாம் என்பது தற்போதைய அரசியல் பார்வையாக பாமக கட்சியை பற்றி பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கோணங்களில் உலாவரும் செய்தியாகும்.


- டெல்லிகுருஜி