சசிகலாவுக்கு எதிராக ஒ.பன்னீர்செல்வம்!




அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அதற்காக பொதுவெளியில் பத்திரிகையாளர்களை சந்திக்கும் பொழுது அவர்களது கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொழுது சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று பொதுவெளியில் தொடர்ந்து கூறி வந்தார். குறிப்பாக ஆட்சி பறிபோனப் பிறகு இதுபோல் கூறிக்கொண்டு வந்த ஒ.பன்னீர்செல்வம் மீண்டும் சசிகலா அதிமுகவிற்குள் வந்துவிட்டால் தனக்கு மிகப் பெரிய ஆபத்து இருப்பதை உணர்ந்தே அவரை கட்சியில் சேர்க்க வேண்டாம் என்று முதன் முதலில் தர்மயுத்தம் நடத்தியவர். பிறகு எடப்பாடி பழனிசாமியோடு சமரசம் செய்துக் கொண்டு பிரதமர் மோடி அவர்களின் ஆலோசனையை கேட்டு மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு துணை முதல்வர் பதவியும் பெற்றுக் கொண்டு சசிகலாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். 


துணை முதல்வர் பதவி மற்றும் அதிமுக ஆட்சி இரண்டும் பறிபோனப் பிறகு இணை ஒருங்கிணைப்பாளர் ஆன எடப்பாடி பழனிசாமியை பணிய வைப்பதற்காக, மிரட்டுவதற்காக கட்சியில் தனக்கு செல்வாக்கு இருப்பதை காட்டி கொள்வதற்காக அவ்வப்பொழுது சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற பத்திரிகையாளர் கேள்விக்களுக்கெல்லாம் கட்சி தான் முடிவு செய்யவேண்டும் என்று கூறிக்கொண்டு தனது செல்வாக்கை நிலைநிறுத்தி வந்தார். இவர் சமீபத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பங்கேற்று கட்சி நிர்வாகிகள் இடத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும் தொடர் தோல்விகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்ற நேரத்தில் சசிகலா குறித்து எந்த கேள்வியும் எழுப்பாமல் பிரச்சனையை திசை திருப்பி வழிகாட்டு குழு எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று குரல் எழுப்பி கூட்டத்தில் சலசலப்பை உருவாக்கினார் ஒ.பன்னீர்செல்வம்.


தனது கருத்தை மாவட்ட செயலாளர்கள் மத்தியில் ஆவேசமாக தெரிவித்த அன்வார்பாஷாவுக்கு எதிராக தூ-ண்டிவிட்ட எடப்பாடி ஆதரவாளர்கள் பிறகு எந்த முடிவும் எட்டப்படாமல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவுபெற்றது. இந்த நிலையில் ஒ.பன்னீர்செல்வம் பற்றி கட்சியினர் மத்தியில் சந்தேகபார்வை எழுந்துள்ளது. இதனால் சசிகலா தரப்பும் டிடிவி தினகரனும் ஒ.பன்னீர்செல்வத்தை பழிவாங்குவதற்காக பழிவாங்க வேண்டும் அல்லது அதிமுகவில் அவரது செல்வாக்கை குறைத்து அவரது ஆதரவாளர்களை அவர்களிடம் இருந்து பிரித்து தனிநபராக ஆக்கவேண்டும் என்று கோபமாக இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் புரிந்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி நாளுக்குநாள் தனது செல்வாக்கை அதிமுகவில் உயர்த்திக் கொண்டு வருகிறார். சி.வி.சண்முகம் போன்றவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக குரல் எழுப்புவதினால் வெளிவட்டாரத்தில் அவருக்கு அவப்பெயர் அதிகளவில் ஏற்படுகிறது.


தங்கமணி, வேலுமணி இருவரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாயை திறக்காமல் இருக்கும் பொழுது வன்னியரான சி.வி.சண்முகம் ஏன் வெகுந்து எழவேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. ஆக மொத்தம் சசிகலா ஆதரவு நிலை என்பதை ஒ.பன்னீர்செல்வம் ஒருகாலத்திலும் எடுக்கமாட்டார் என்பது மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் மூலம் சசிகலா பிரச்சனையை எழுப்பாமல் மௌனமாக இருந்தது ஒ.பி.எஸ் மீது சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்களுக்கும் மீண்டும் மீண்டும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.


- டெல்லிகுருஜி