வன்னியர்களை ஒழிக்கும் போராட்டத்தில் தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் தீவிரம்!
ஒரு வாசகனின் கடிதம்!!


தமிழக அரசியலில் கடந்த 70 ஆண்டு காலம் இரு கட்சிகளுக்கு ஆதரவாக மட்டுமே எழுதியும், குரல் கொடுத்து வந்த ஊடகங்கள் இரு கட்சிகள் செய்த ஊழல்களையும் பலமுறை வெளிச்சம் போட்டு காட்டியது. இருந்தாலும் இரு கட்சிகளை மட்டுமே தூக்கி வைத்துக் கொண்டு பாராட்டி மகிழ்ந்து சலுகைகளை பெற்றுக்கொண்டு விளம்பரங்கள் மூலம் தங்கள் வருவாயை பெறுக்கிக் கொண்டுள்ளனர். இதே நிலை தான் மத்திய அரசு ஆட்சிக்கு வந்த போது இரு கட்சிகளை சார்ந்த (பாஜக, காங்கிரஸ்) மத்திய அரசின் சலுகைகளையும் முழுமையாக அனுபவித்துக் கொண்டு தமிழ்நாட்டு மக்களிடம் பு ரூபாய், சு ரூபாய் செய்தித்தாள்களை விற்பனை செய்து மக்களின் எண்ண ஓட்டங்களையும் துடிப்பான இளைஞர்களின் செயல்பாடுகளையும் மடை மாற்றி திசை திருப்பி தங்கள் வருவாயை பெருக்கிக் கொண்டு எண்ணற்ற இளைஞர்கள் இன்று என்ன செய்வது என்று தெரியாமல் எங்கே போவது என்று புரியாமல் வயிற்றுப் பிழைப்புக்கு வேலை தேடி அலைந்துக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் பத்திரிகை செய்தித்தாள்கள், வாரஇதழ், மாத இதழ்கள் படிப்பதிலும் தொலைக்காட்சி பார்ப்பதிலும் சினிமா நடிகர்களுக்கு கட்அவுட் வைத்து பாலஅபிஷேகம் செய்து ரசிகர் மன்றம் என்ற போர்வையில் நச்சு கலந்த வாழ்க்கையை வாழ்கிறார்கள். தேர்தல் வந்தால்  எந்த கட்சிக்கு வேண்டுமென்றாலும் வாக்களித்து தங்கள் எதிர்காலத்தை தொலைத்து விட்டு புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய நிலைக்கு தமிழ்நாட்டு இளைஞர்களும் வாக்காளர்களும், ஆண்களும் பெண்களும் திசைமாறி செல்வதற்கும் தடம்புரண்டு வாழ்வதற்கும் வசதிக்கு ஏற்றாற்போல் தாங்கள் விரும்பும் கட்சியில் தாங்கள் விரும்பும் சாதி சங்கங்களில் தாங்கள் விரும்பும் நடிகர்களின் ரசிகர் மன்றங்களில் உறுப்பினர்களாகி உருப்படாமல் வீதியில் அலைந்துக் கொண்டும் பசி, பட்டினி, வறுமை, ஏழ்மை என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் மூல காரணமாக தங்கள் வருவாயை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொண்டு தங்கள் விருப்பம் போல் அரசியல் கட்சிகளும் பத்திரிகை செய்தித்தாள்களும் நாளேடுகளும் தொலைக்காட்சி ஊடகங்களும் தொடங்கி நடத்திக் கொண்டு தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் தான் விரும்புகின்ற அல்லது மக்கள் விரும்புகின்ற இயக்கங்களாக (திமுக, அதிமுக) இரு கட்சிகளை மட்டுமே உயர்த்திப் பிடித்து மக்கள் மனதில் தங்களை நடுநிலையானவர்களாக காட்டிக் கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் புரிந்து தெரிந்து அறிந்து நியாயத்தின் பக்கமும் நடுநிலையாளர்களின் பக்கமும் நின்றுக்கொண்டு சீர்தூக்கிப் பார்த்து தங்களை தாங்களே தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று வாசகர்கள் வரவேண்டும். தங்கள் வாசிப்பும் தன்மையும், பழக்கமும் உயர்வடைய வேண்டும். பத்திரிகைகளில் வருகின்ற செய்திகள் எல்லாம் உண்மை என்று நம்பி ஒருதலைபட்சமாக தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் பத்திரிகைகளில் வரும் செய்திகளை நம்பி தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று எடுத்து கூறுவதற்காக தான் ஒரு வாசகனின் கடிதமாக மக்கள் பார்வைக்கு இது பதிவுசெய்யப்படுகிறது. 


- டெல்லிகுருஜி