மருத்துவப்படிப்பில் மாணவர் சேர்க்கை!
வன்னியர்களுக்கு பட்டை நாமம்!    


வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் தனி உள்ஒதுக்கீடு சட்டம் சட்டமன்றத்தில் இயற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று சட்டமாகி நடைமுறைக்கும் வந்துவிட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இடஒதுக்கீடு வழங்கிய அதிமுக அரசு தோற்கடிக்கப்பட்டு புதிதாக திமுக அரசு பதவியேற்றது. இது கட்சிகளுக்கும் வாக்கு வித்தியாசம் மூன்று சதவிகிதம் மட்டுமே குறிப்பிடக்தக்கது. இந்த நிலையில் பொறியியல் படிப்பில் வன்னியர் மாணவர்கள் சேர்க்கை நடந்து முடிந்தது. அதற்கு புதிய அரசும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் ஒப்புதல் அளித்தார்கள். இந்த ஒப்புதலை எதிர்த்து 10.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்கப்பட்டது தவறு என்று 115 சாதியை சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். அந்த வழக்கு விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு சென்னையில் இருந்து மாற்றம் செய்து வன்னியர்களுக்கு வழங்கிய 10.5 சதவிகிதம் செல்லாது என்றும் அதிமுக ஆட்சியை இயற்றிய சட்டமே சட்டத்தை செல்லாது என்று கூறி உள்இடஒதுக்கீட்டையும் ரத்து செய்து சட்டத்தையும் ரத்து செய்து விட்டது உயர்நீதிமன்றம். இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு மேல்முறையீடு செய்து வழக்கு உச்சநீதி மன்றத்தில் இருக்கும் தருவாயில் வன்னியர்களுக்கான எம்.பி.சி., (பி) என்பதை நீக்கி தமிழக அரசு புதிய விளம்பரம் செய்து 20 சதவிகிதத்திற்குள் வன்னியர்கள் போட்டியிட வேண்டும் என்று கல்வி வேலைவாய்ப்பில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பொழுது 10.5 சதவிகிதம் மருத்துவ மாணவர்கள் சேர்க்கப்பட்டால் அரசு ஒதுக்கீட்டில் சுமார் 600 இடங்கள் வன்னிய மாணவர் மாணவிகளுக்கு கிடைக்கும் வாய்ப்பு இருந்த நிலையில் அது பறிப்போய் விட்டது. உச்சநீதிமன்றத்தின் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது இத்தகைய நடைமுறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்துவது எத்தகைய நியாயம் என்று கேட்பதற்கும் இதற்கான மாற்றுவழி என்னவென்று அரசை வலியுறுத்துவதற்கும் இன்று நாதியில்லாமல் போய்விட்டது.


வன்னியர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி தான் என்று கூறிக்கொள்ளும் பாமக கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களும் இளைஞரணி செயலாளர் டாக்டர் அன்புமணி அவர்களும் மருத்துவ மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான ஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பாமல் ஒரு திரைப்பட நடிகருக்கு கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார். நடிகரோ இவர்கள் எழுதிய கடிதத்திற்கு அடிப்பணிந்து செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்காமல் அலட்சியமாக பதிலளிக்கிறார். இது தான் இன்று வன்னியர்களின் நிலை. விடியல் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டியது தான்.  


- டெல்லிகுருஜி