ஆளுநருடன் அதிமுக சந்திப்பு!
பாதுகாப்பு- வேண்டும் எடப்பாடி முறையிடு  மனு!

கடந்த கால அதிமுக அமைச்சரவை அமைச்சர்கள் ஊழல் குறித்து திமுக தரப்பு மற்றும் பாமக தரப்பு ஊழல் பட்டியல் தயாரித்து தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித்துடன் இரண்டு கட்சிகளும் பட்டியல் கொடுத்துள்ளது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த திமுக கழகம் அதிமக அமைச்சர்கள் ஊழல் பட்டியலை ஒவ்வொன்றாக தட்டி எடுத்து தொடர்ந்து மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபி சிஐடி போலீசார் மூலம்  சோதனை செய்து ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்று தருவதற்கு முயற்சித்து வருகிறது. இதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இல்லங்களிலும் அவருக்கு நெருக்கமான சகாக்களிடமும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை செய்து ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இந்த அடிப்படையில் இன்னும் சில அமைச்சர்கள் பெயர்கள் வீடுகளில் சோதனை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளிலும் ஆதாரங்களை தேடும் பணியிலும் காவல்துறை ஈடுபட்டு வரும் நிலையில் சோதனை என்ற பெயரில் அதிமுகவினர்களுக்கு அச்சத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துவதுடன் கட்சியினர்களுக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஏற்படுத்துவதாகவும் தொடர்ந்து இதுபோல சம்பவங்கள் மூலம் அதிமுக கட்சி பலகீனபடுத்துவதில் திமுக அரசு செயல்படுகிறது. இத்தகைய செயல்பாடுகளில் இருந்து கட்சியை காப்பாற்றுவதற்கும் அதிமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர்களை பாதுகாப்பதற்கும் ஆளுங்கட்சியிடம் இருந்து எங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலையிலான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் புடை சூழ ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரவி அவர்களை சந்தித்து கோரிக்கை மனுவை அதிமுக வழங்கியுள்ளது. இந்த சந்திப்பில் வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், வைத்தியலிங்கம், கே.பி.முனுசாமி, ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இது மட்டுமின்றி சசிகலாவை தூண்டிவிட்டு அதிமுகவை பலகீனப்படுத்தும் முயற்சியிலும் ஆளுங்கட்சி ஈடுபட்டு வருவதாகவும் தங்கள் புகாரை ஆளுநரிடம் எடுத்துக் கூறினார்கள்.


-டெல்லிகுருஜி