5 ஆண்டுகளாக மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெ. நினைவிடத்தில் இறக்கி வைத்திருக்கிறேன்: சசிகலாசசிகலா இன்று காலை மெரினாவிற்குச் சென்று ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். மற்றும் அண்ணா நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

மரியாதை செலுத்திய பின்னர், ‘‘கடந்த 5 ஆண்டுகளாக என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்திருக்கிறேன் . ஜெயல‌லிதா நினைவிடத்திற்கு ஏன் தாமதமாக வந்தேன் என்று அனைவருக்கும் தெரியும்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தமிழக மக்களுக்காகவே வாழ்ந்தனர். இருவரும் அதிமுக-வை காப்பாற்றுவார்கள்’’ என்றார்.