புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல்!




கடந்த பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருந்த புதுச்சேரி மாநிலத்தில் சு006 ஆண்டு காங்கிரஸ் முதல்வராக இருந்த என்.ரங்கசாமி அவர்கள் உள்ளாட்சி தேர்தலை நடத்தினார். அதன் பிறகு சு0புபு ஆம் ஆண்டு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தொடங்கி ஆட்சியை கைப்பற்றிய ரங்கசாமி உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரியை நியமிக்கலாம் என்று உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நைபெறுவதற்கான அறிகுறியே தென்படவில்லை. நீதிமன்றம் வரை சென்று உள்ளாட்சிமன்ற தேர்தலை நடத்தவேண்டும் என்று முறையீடு செய்தும் தேர்தலை நடத்தவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் தேர்தல் நடத்துவதற்கான அறிகுறி தென்படவில்லை. இதற்கிடையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தி மாநில தேர்தல் ஆணையத்தை கண்டித்து தீர்மானத்தை நிறைவேற்றி மாநில ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறியே தெரியவில்லை.


தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இடஒதுக்கீட்டு பிரச்சனையை கூறி புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை அந்த மாநில அரசு எடுத்துள்ளதாக தற்போது விமர்சனம் செய்யப்படுகிறது. உண்மையிலேயே நடைபெறாமல் இருப்பதற்கு தடைபோடும் நிகழ்ச்சியில் அனைத்து கட்சிகளும் ஈடுபடுவது தான் ஆச்சார்யமான செய்தி. சட்டமன்ற உறுப்பினர்களுக்கே இல்லாத அதிகாரம் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு இருப்பதினால் இத்தகைய நிலை புதுச்சேரியில் நிலவு-கிறது. 

- டெல்லிகுருஜி