அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில், அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார்.

சென்னை அண்ணா சாலையில்  மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்ட வல்லுநர்களை ஆலோசித்து சென்னை அண்ணா சாலையில்  ஏதாவது ஒரு இடத்தில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தி.க. தலைவர் வீரமணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில் சட்டசபையில் முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.