எடுத்த சபதம் முடிப்பேன் - சசிகலா அதிரடி அறிவிப்பு!


சசிகலா சிறையில் இருந்து வெளிவந்தவுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்படும் என்றும் அதிமுக அலுவலகத்தை சசிகலா கைப்பற்றுவார் என்றும் பொதுச்செயலாளர் என்ற முறையில் அதிமுக அலுவலகத்தை கைப்பற்றுவார் என்றும் அவரை வரவேற்று மாவட்ட செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிப்பார்கள் என்றும் அதனால் எடப்பாடி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும் என்றும் பல்வேறு விதமான யூகங்களும் கருத்துக்களும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

ஆனால் நடந்ததோ 23 மணி நேர ஊர்வலம் மட்டுமே என்பதை தமிழ்நாட்டு மக்கள் கண்டு ரசித்தார்கள். அமைதியாக முறையில் சசிகலா தி.நகரில் உள்ள அவரது உறவினர் இல்லத்தில் தங்கி மௌனம் காத்து வருகிறார். வருகிற 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாள் அன்று ஜெயலலிதா எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு தஞ்சாவூர் செல்வதற்காக அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனது கணவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக செல்வார் என்று கூறப்படுகிறது.

சசிகலா அவர்களால் அதிமுக ஆட்சிக்கு நேரடியாக எந்தவித ஆபத்தும் ஏற்பட போவதில்லை. பொதுச்செயலாளர் என்று தன்னைக் கூறிக்கொண்டு திமுகவுக்கு எதிரியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு அதிமுகவின் தொண்டர்களின் நன்மதிப்பை பெறுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்வார்.

ஒருவேளை அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில் அந்த வெற்றியில் தனது பங்கு இருப்பதாக கூறிக்கொள்வார். அதே நேரம் அதிமுக தோல்வியுற்று திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தால் அதற்கு தான் தேர்தலில் ஈடுபடாததே முக்கிய காரணம் என்றும் அமமுகவை மதிகவில் சேர்க்க விரும்பாதது இத்தகைய தோல்விக்கு காரணம் என்றும் கூறிக்கொண்டு மறுபடியும் பொதுச்செயலாளர் என்ற அஸ்திரத்தை கையில் எடுத்து அதிமுக கட்சியை கைப்பற்றுகின்ற முயற்சியில் சசிகலா ஈடுபடுவார்.

ஒ.பன்னீல்செல்வம் வரும் தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் வெற்றிப்பெறுவதற்கு தினகரன் தலைமையிலான கட்சி திமுக கூட்டணியும் எதிர்த்து வேலைசெய்யும்.

- டெல்லிகுருஜி