வன்னியர் வாக்கு வங்கியை வசப்படுத்தும் எடப்பாடி பழனிசாமி!

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பொதுமக்கள் மத்தியில் மிக பிரமாண்ட வரவேற்பு கிடைத்து வருகிறது. இதை வாக்கு வங்கிகளாக மாற்றுகின்ற பொறுப்பை அந்த நிர்வாகிகளிடம் உள்ளது. குறிப்பாக மாவட்ட செயலாளர்கள் மாநில நிர்வாகிகள் இதற்கான ஏற்பாட்டினை செய்து வருவதுடன் தேர்தலுக்கும் தயாராகுங்கள் என்று முதல்வரின் உத்தரவை ஏற்று செயல்பட்டு வருகிறார்கள். சசிகலா எதிர்ப்பு என்கின்ற ஒரு பிம்பம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் எதிர்கால திட்டத்திற்கு எந்த வகையிலும் இடையூறாக இருக்காது என்பது எடப்பாடி பழனிசாமியின் கணக்கு. மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சியை கைப்பற்றுவதற்கு அனைத்து வழிகளிலும் எல்லாவித ஏற்பாடுகளையும் திட்டமிட்டு செய்து வரும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சசிகலா எதிர்ப்பை சுலபமாக எதிர்க்கொள்வதற்கு தன்னை தயார்படுத்தி விட்டார் என்பதையும் அவரது சுற்றுப்பயணத்தின் பொழுது மக்கள் ஆதரவு மூலம் தெளிவாக தெரிகிறது.

குறிப்பாக வன்னியர் பகுதிகளில் அதிக அளவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு நிலை ஏற்பட்டிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. வன்னியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனி உள் ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் ஒட்டுமொத்த வன்னியர்களின் வாக்குகளை அதிமுக பெற்று தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சி அமைக்கும் ஒரு சூழலை உருவாக்குவதற்கும் வாய்ப்பு ஏற்படும். தேர்தலுக்கு முன்போ அல்லது தேர்தலுக்கு பின்போ இடஒதுக்கீடு என்பது கட்டாயம் என்பதை புரிந்துக்கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வன்னியர் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு தயாராகி வருகிறார் என்பதும் அதற்கான பேச்சுவார்தையை தொடங்கிவிட்டார் என்பதும் அதிமுக ஆட்சியாளர்களுக்கு மிகப் பெரிய அளவில் நம்பிக்கை தரக்கூடிய செய்தியாக இருக்கிறது. ஒருவேளை டாக்டர் ராமதாஸ் அவர்கள் தான் விரும்பிய அளவிற்கு இடஒதுக்கீடு வழங்கவில்லையென்று அதிமுக கூட்டணியை விட்டு விலகி சென்றாலும் வன்னியர்கள் வாக்குவங்கி என்பது அதிமுக விட்டு விலாகாது என்பது உறுதி. அதிஷ்டம் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருப்பது அவரது வெற்றிக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கை அதிமுகவினர் இடத்தில் அசைக்க முடியாத அளவிற்கு மன உறுதியோடு தேர்தலை சந்திக்க தயாராகி வருறார்கள்.