அமைச்சர் நமச்சிவாயம் அதிரடி முடிவு! பாஜகவில் இணைகிறார்!

 

புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் பாஜக அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி ஜே.பி.நட்டா தலைமையில் நமச்சிவாயம் அவர்களுடன் புதுச்சேரியை சேர்ந்த முக்கிய அரசியல் புள்ளிகள் 20 பேருக்கும் மேற்பட்டவர்கள் அவருடன் பாஜக கட்சியில் சேரப்போகிறார்கள் என்ற தகவல் புதுவை மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நமச்சிவாயம் இத்தகைய முடிவை எடுப்பதற்கு காரணம் தன்னை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிப்பெற்ற காங்கிரஸ் கூட்டணி முதலமைச்சர் வாய்ப்பை தனக்கு வழங்காமல் தேர்தலில் போட்டியே இடாமல் சட்டமன்ற உறுப்பினரும் ஆகாமல் திரைமறைவில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முயற்சி செய்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தயவால் புதுச்சேரி மாநில முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் நாராயணசாமி.

இந்த நிலையில் இத்தகைய செயல் நமச்சிவாயத்திற்கு ஆறாத வடுவை ஏற்படுத்தியிருந்தாலும் ராகுல்காந்தி அவர்களின் நட்பை ஏற்று காங்கிரஸ் கட்சி பிளவுப்படாமல் இருக்க வேண்டி சமாதானத்தை ஏற்றுக்கொண்டு அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார் நமச்சிவாயம். இந்த காயம் கடந்த நான்கரை ஆண்டுகளாக ஆறா வடுவாக நீர் பூத்த நெருப்பாக நமச்சிவாயம் மனச்சாட்சி நிழலாடிக் கொண்டிருந்தது. அந்த நிழல் யுத்தத்திற்கு நிஜ வடிவம் தருவதற்காக தற்பொழுது முடிவெடுத்துள்ள அமைச்சர் நமச்சிவாயம் பாஜக கட்சியில் சேர்ந்து தனது மக்கள் செல்வாக்கை நிரூபித்துக் காட்டி கடந்த காலத்தில் தனக்கு கிடைக்காமல் போன முதல்வர் பதவியை அடைவதற்கு இத்தகைய முடிவினை எடுத்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

மேலும் தற்பொழுது உள்ள சூழ்நிலையில் புதுச்சேரியில் முதல்வரை மாற்றிவிட்டு நமச்சிவாயத்தை முதலமைச்சர் ஆக்குவதற்கு டெல்லி காங்கிரஸ் தலைமை முயற்சித்த போதும் அதனை ஏற்க மறுத்து தனது விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு மக்களின் விருப்பத்திற்கேற்ப அதிரடி முடிவை நமச்சிவாயம் எடுத்துள்ளார். இதுமட்டும் அல்ல புதுச்சேரி மாநிலத்தில் பெருபான்மை வாக்காளர்களாக வசிக்கும் வன்னியர்கள் மத்தியிலும் நாராயணசாமி அவர்கள் முதல்வராக நீடிப்பதே விரும்பவில்லை என்பதை நன்கு புரிந்துக்கொண்ட நமச்சிவாயம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியப் பிறகு தான் இத்தகைய முடிவுக்கு அவர் தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலரும் நமச்சிவாயத்தின் முடிவினை வரவேற்று ஆதரவு தெரி வித்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன் ஆட்சி அமைப்பதா அல்லது தேர்தலுக்கு பின் ஆட்சி அமைப்பதா என்ற கேள்விக்கு நமச்சிவாயம் தரப்பு கூறும் காரணம் ஆட்சியை மாற்றுவதோ அல்லது புதிய ஆட்சியை அமைப்பதோ எங்களுக்கு சிரமமான காரியம் அல்ல. அதே வேளையில் பாஜக கட்சியின் முடிவை ஏற்றுக்கொண்டு மத்தியில் ஆட்சியில் இருக்கும் அந்த கட்சியின் தலைமையோடு இணைந்து புதுச்சேரி மாநிலத்தோடு இணைந்து செயல்பட்டால் புதுச்சேரி மாநிலத்திற்கு மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றுவது சுலபமாக அமையும் என்பதை புரிந்துக்கொண்டு தான் இத்தகைய முடிவினை அமைச்சர் நமச்சிவாயம் எடுத்துள்ளார் என்கிறார்கள்.

முதல்வர் நாராயணசாமியால் ஏற்பட்ட அதிருப்தி அவரது செயல்பாடுகளால் கடந்த ஐந்தாண்டுகளில் நல்ல காரியங்களையும் செய்து தரமுடியவில்லை என்கின்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பதால் புதுச்சேரி மாநில மக்கள் வரும் தேர்தலில் காங்கிரஸ் எதிர்த்து வாக்களிக்க தயாராகிவிட்டார்கள். இனிமேலும் காங்கிரஸ் கட்சியில் நாம் இருந்தால் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர இயலாது என்பதனையும் புரிந்துக் கொண்டு தான் நமச்சிவாயம் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவு சரியோ, தவறோ இனி காங்கிரஸ் கட்சியில் இருந்து எந்த பயனும் இல்லை என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்தள்ள நமச்சிவாயம் 2021 சட்டமன்ற தேர்தலில் தனது தலைமையில் ஒரு கூட்டணியை அமைத்து ஆட்சியை கைப்பற்றுவதற்கான முயற்சியில் இப்பொழுதே தொடங்கிவிட்டார். இதற்காக பல பிரமுகர்களை சந்தித்து தனது முடிவுக்கு ஆதரவை திரட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறார். புதிய கட்சியா அல்லது பாஜக கட்சியில் இருப்பதா என்ற யோசனையில் உள்ள நமச்சிவாயம் விரைவில் ஒரு நல்ல முடிவை எடுப்பார் என்று பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அநேகமாக காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறுவது உறுதி செய்யப்பட்ட ஒரு விஷயமாக தெரிகிறது.

- டெல்லிகுருஜி