பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் விடுதலையாகி தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். இதன் முதற் கட்டமாக 30 நாட்கள் சென்னையில் தங்கியிருந்து ஓய்வு எடுக்கும் சசிகலா அதிமுக ளர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடும் அதே வேளையில் தனது ஆதரவாளர்களான அதிமுகவினர்களை தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் அதிமுகவின் வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக வேட்பாளர் பட்டியலை தயாரித்து வருகிறார். இதற்கான ஏற்பாட்டினை தினகரன் மூலம் மற்றும் டாக்டர் வெங்கடேஷ் மூலமாகவும் விசாரிக்கும்படி உத்தரவு விட்டுள்ளார். மார்ச் மாதம் தான் தேர்வு செய்த வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமியிடம் திவாகரன் மூலம் ஒப்படைத்து அத்தனை பேர்களுக்கும் வாய்ப்பு வழங்குமாறு உத்தரவு விடுகிறார். இதற்கு ஒப்புக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒ.பன்னீர்செல்வம் அவர்களை பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம் அவரை கட்டுப்படுத்துகின்ற பணியை நான் பார்த்துக் கொள்கிறேன்.
ஆகவே ஒ.பன்னீர்செல்வம் குறித்த எந்தவித கவலையும் உங்களுக்கு வேண்டாம். நீங்கள் உங்கள் விருப்பம் போல் செயல்படுங்கள் என்று கூறியுள்ள சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆனப் பிறகு சிறிது காலம் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாகவும் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் தனது ஆதரவாளர்களுக்கு தொகுதிகளை பெற்று தருவதாகவும் வாக்குறுதி அளித்து உள்ளாராம். தமிழக அரசியலில் சசிகலா அலை பல திருப்பங்களையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தும் என்பதில் ஆச்சரியமில்லை .
- சாமி