பாமகவில் இமேஜ் குறைகிறது!


திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் சேலம் சுற்றுப்பயணத்தின் போது தாக்கப்பட்டார் என்ற செய்தியும் அவரது கார் அடித்து நொறுக்கப்பட்டது என்ற தகவலும் வாட்ஸ்அ ப் மற்றும் வலைதளங்கள் மூலம் பரபரப்பாக செய்தியாகி ஒலிப்பரப்பானது. இந்த செயலுக்கு காரணமானவர்கள் பாமக கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெருங்கிவரும் காலகட்டத்தில் அரசியல் விமர்சனங்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்வது பாமக இமேஜ்யை உயர்த்தும். அதே நேரம் வன்முறை அடிதடி, தாக்குதல், உணர்ச்சிவசப்படுதல், போன்ற செயல்களால் கட்சியின் தலைமைக்கும், கட்சிக்கும் அவப்பெயரை பெற்றுதரும் என்பதை பாமக நிர்வாகிகள் கவனத்தில் கொள்வது அவசியமாகும். டாக்டர் அன்புமணி ராமதாசும், தயாநி திமாறனும் நாடாளுமன்ற வளாகத்தில் அடிக்கடி நேரில் சந்தித்து பேசிக்கொள்பவர்கள் தான். அவர்கள் ஒருபோதும் பகைவுணர்வோடு ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வது கிடையாது என்பதை பாமக கட்சி யினர் புரிந்துக்கொண்டு செயல்படுவது நலம் பயர்க்கும் நன்மை தரும்.

- சாமி