புதுச்சேரி அரசியலில் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வருகிறது!


முதல்வர் ராயணசாமி தலைமையில் ஆன பல அமைச்சர்கள் கட்சியில் இருந்து விலகி புதிய கூட்டணி அமைத்து எதிர்வரும் 2021 தேர்தலை சந்திக்க தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக பொதுப்பணிதுறை அமைச்சராக இருக்கும் நமச்சிவாயம் மற்றும் நலத்துறை அமைச்சராக இருக்கும் கந்தசாமி இருவரும் முதல்வர் நாராயணசாமி மீது கடுமையான அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே போல் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஜான்குமார் அவரும் காங்கிரசுக்கு முழுக்குப் போட்டு தேசிய கட்சியில் இணைந்து முதல்வராகி விடலாம் என்று கணக்குப் போடுகிறார். மேலும் தனக்கு தன் மகனுக்கும் தேர்தலில் போட்டியிட சீட்டு கேட்டு வருகிறாராம்.

தற்பொழுது சபாநாயகராக இருக்கும் சிவகொழுந்து அவர்களும், மல்லாடி கிருஷ்ணராவ் போன்றவர்களும் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி முதல்வர் நாற்காலியில் அமர ஆசைப்படுகிறார்களா? தற்பொழுது காங்கிரஸ் கட்சியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் வெவ்வேறு கோணத்தில் யோசித்துக் கொண்டு காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறுவதற்கு கால நேரம் பார்த்துக் கொண்டு ஜோதிடரை சந்திக்கிறார்களா? ஆக மொத்தம் புதுச்சேரி காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி தலைமையில் பிளவுப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது.

30 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட புதுச்சேரி மாநிலத்தில் ஒவ்வொருவரும் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டால் யாருக்கு வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்ற கேள்வி புதுவை மாநிலத்தில் உலா வருகிறது.