ரஜினிகாந்த் அறிவிப்பு வாக்காளர்களுக்கு எச்சரிக்கை

அக்னிமலர்கள் கடந்த மாதம் குறிப்பிட்டிருந்ததுப் போல் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவது இல்லை என்ற அறிவிப்பு 29.12.2020 வெளிவந்திருக்கிறது. இந்த செய்தி வரவேற்கத்தக்க செய்தி என்றாலும் பல்வேறு ஊடகவியலாளர்களும், தொலைக்காட்சி செய்திகளிலும் ரஜினியை தாங்கிப்பிடித்து விவாதங்கள் நடத்தியது பொய் என்று ஆகிவிட்டது. இனிமேலும் ரஜினிகாந்த் குறித்த செய்திகள் விவாதப் பொருள் ஆகாமல் இருந்தால் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளுக்கும் மற்றும் வாக்காளர்களுக்கும் குழப்பம் ஏற்படாமல் இருக்கும். இனிவருங் காலங்களில் பாறையில் நார் உறிக்கும் பணியில் தொடர்ந்து செய்யாமல் ஆன்மிகமாக இருந்தாலும் பகுத்தறிவாக இருந்தாலும் திராவிடமாக இருந்தாலும் தேசியமாக இருந்தாலும் மக்களுக்கு தேவையான முன்னோட்ட செய்திகளை மட்டும் வழங்கி நாட்டுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் செய்திகளை வெளியிட்டால் தேசிய நலனுக்கு உகந்ததாக இருக்கும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.

ரஜினிகாந்த் ரசிகர்கள் கடந்த 40 ஆண்டு காலமாக அரசியல் ரீதியாக எவ்வாறு செயல்பட்டார்களோ அவ்வாறே செயல்பட்டு தங்களுக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றத்தில் இருந்து தங்களை தாங்களே விடுவித்துக் கொள்ளவேண்டும். இப்ப இல்லை என்றால் இனி எப்பொழுதுமே இல்லை என்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெளிவாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று இந்த நிலை தொடரட்டும் உடல் நலமுடன் ரஜினிகாந்த் தனது திரைப்பணியை சிறப்பாக செய்து முடிக்கட்டும். வாழ்த்துக்கள்!!

- அக்னிமலர்கள்