டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 3 மாநிலத்துக்கு தினமும் ரூ.3,500 கோடி நஷ்டம்


டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக 3 மாநிலத்துக்கு தினமும் ரூ.3 ஆயிரம் கோடி முதல் ரூ.3,500 கோடி வரை நஷ்டம் ஏற்படுவதாக தொழில்துறை கூட்டமைப்பான அசோசெம் தெரி வித்துள்ளது. மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 21வது நாளாக விவசாயிகளின் போராட்டம் நீடிக்கிறது.

பஞ்சாப், அரியானா, இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளே பெரும்பாலானோர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக பஞ்சாப், அரியானா, இமாச்சலபிரதேச மாநில பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தினமும் ரூ.3 ஆயிரம் கோடி முதல் ரூ.3,500 கோடி வரை நஷ்டம் ஏற்படுவதாக தொழில்துறை கூட்டமைப்பான அசோசெம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் போராட்டத்தால் சரக்கு போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் பல பொருட்கள் தேங்கியுள்ளன.

விவசாயிகள் போராட்டத்தால் சரக்கு போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் பல பொருட்கள் தேங்கியுள்ளன. இமாச்சலபிரதேச மாநிலங்களில் உள்ள கிடங்குகளில் இருந்து பொருட்களை எடுத்துச் செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. விவசாயிகள் போராட்டம் காரணமாக பஞ்சாப், அரியானா, இமாச்சலபிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இதுவரை ரூ.18 லட்சம் கோடி பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஜவுளி, ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், விளையாட்டு பொருட்களின் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நெருங்கும் நேரத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டிய பொருட்களையும் அனுப்ப முடியவில்லை. சரக்கு போக்குவரத்து கட்டணம் 10 சதவீதம் வன அதிகரித்துள்ளது. தொழிலாளர்களுக்கும் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம் காரணமாக ரெயில்வே துறைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக பஞ்சாப்பில் விவசாயிகள் தொடர்ச்சியாக ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் வட மாநிலங்களில் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. விவசாயிகள் போராட்டத்தால் பயணிகள் மற்றும் சரக்கு சேவைகளில் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி முதல் ரூ.2,400 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வடக்கு ரெயில்வே பொது மேலாளர் அசுதோஷ் கங்கல் தெரி வித்துள்ளார்.

- சாமி