சசிகலா விடுதலைக்கு பணம் கட்டிய அதிமுக அமைச்சர்கள்!

சசிகலா விடுதலைக்கு பணம் கட்டிய அதிமுக அமைச்சர்கள்!


அதிமுகவில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன் அமமுக புதிய கட்சியை தொடங்கி நடத்திவருகிறார். அந்த கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து கட்சியை வழிநடத்துகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சி சார்பில் 39 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தி சுமார் பதினைந்து லட்சம் வாக்குகளை பெற்று தனது செல்வாக்கை நிரூபித்து உள்ளார். இந்த நிலையில் டிடிவி தினகரன் அதிமுக மீதும், அதிமுக அரசின் மீதும் கடந்த காலங்களில் கூறிவந்த கடுமையான விமர்சனங்களை தற்பொழுது முன்வைப்பதில்லை. ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும், துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் தருவதற்காக தனது ஆதரவு “சிலிப்பர் செல்கள்” அதிமுகவில் ஏராளமனவர்கள் இன்று பதவியில் இருக்கிறார்கள். அதில் சில சட்டமன்ற உறுப்பினர்களும் சில அமைச்சர்களும் இருக்கிறார்கள் என்று கூறி அதிமுக அரசுக்கு அடிக்கடி அதிர்ச்சியை தந்து வருகிறார்.


சமீப காலமாக அமைதியான முறையில் அரசியல் நடத்திவரும் டிடிவி தினகரன் தனது சித்தி சசிகலா நடராஜன் அவர்கள் விடுதலை விவகாரத்தில் மட்டும் முழு கவனம் செலுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக அபராத தொகை ரூ.10 கோடியை “ஓய்ட்” மணியாக எப்படி செலுத்தவது என்ற யோசனையில் இருக்கும் பொழுது தற்பொழுது அமைச்சராக உள்ள பலர் சசிகலா செலுத்த வேண்டிய அபராத தொகையை தாங்கள் செலுத்துவதாக கூறி போட்டிப் போட்டுக் கொண்டு அபராத தொகையை செலுத்துவதற்கு முன் வருகிறார்களா? எந்த புற்றில் எந்த பாம்பு என்பது தெரியாமல் எடப்பாடி விழி பிதுங்கி நிற்கிறாராம்.