அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்பார்த்த முடிவு எதிர்பாராத திருப்பம்! ஜோ பிடனுக்கு வெற்றி! ட்ரம்புக்கு தோல்வி!

அமெரிக்க அதிபர் தேர்தல்
எதிர்பார்த்த முடிவு எதிர்பாராத திருப்பம்!
ஜோ பிடனுக்கு வெற்றி! ட்ரம்புக்கு தோல்வி!


அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு பதிவிற்கு முதல்நாள் அக்னிமலர்கள் தனது கருத்தினை பதிவு செய்திருந்தது. தேர்தல் வாக்கு பதிவும் வாக்கு எண்ணிக்கையின் முடிவும் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராகவும் குடியரசு தலைவருக்கு எதிராகவும், இருக்கும் என்று செய்தி வெளியிட்டிருந்தோம் அதன்படி அதிபராக வாய்ப்பு ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடல் அவர்களுக்கு கிடைத்துள்ளது. இன்னும் முழு முடிவு வெளியிடப்படாத நிலையில் அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோஷம் அமெரிக்க வீதிகளில் உலாவர தொடங்கிவிட்டது. இன்று இல்லை என்றாலும் நாளை அல்லது நாளைய மறுநாள் அதிபர் ட்ரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளத் தான் போகிறார்.


புதிய அதிபரின் வரவு என்பது இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பதற்கான முயற்சிகளை இந்திய அரசும், இந்திய தூதரும் தற்போது மேற்கொள்ள தொடங்கிவிட்டார்கள். புதிய அதிபர் சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஆதரவாக இருப்பதாக செய்திகள் வெளியிடப்பட்டாலும் இந்தியா மீது பாசத்தை காட்டுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும் என்று நம்பலாம். இதற்கு காரணம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் துணை அதிபருக்கு போட்டியிடும் கமலாஹரிஸ் இருப்பதால் இந்தியா மீது புதிய அதிபருக்கு கசப்புணர்வை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்றே கூறலாம். காஷ்மீர் விவகாரத்தில் ஜோபிடன் கமலாஹரிஸ் இருவரும் இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தாலும் தற்போதுள்ள சூழலில் அவர்கள் தங்கள் கருத்துக்களை மாற்றிக் உள்ள நிலை உருவாகலாம். புதிய அதிபரை இந்தியாவின் பக்கம் திருப்புவதற்கு பேச்சுவார்த்தைகள் மூலமும் அமெரிக்காவின் சுற்றுப்பயணம் செய்வதின் மூலமும் இந்திய அரசு இணக்கமான சூழலை அமைக்க முடியும். இதற்கு பிரதமர் மோடி அவர்களும் தன் விருப்பத்தை வெளிப்படுத்தும் நேரம் வரும்.


பிரதமர் மோடி அவர்கள் தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது அதிபர் ட்ரம்ப் அவர்களை ஆதரித்து பேசியிருந்தாலும் மீண்டும் அதிபராக ட்ரம்ப் வரவேண்டும் என்று விரும்பி இருந்தாலும் அதிபர் ட்ரம்ப் அவர்களின் தோல்வியை இந்திய பிரதமர் மோடி அவர்களின் இமேஜையும், செல்வாக்கையும், ட்ரம்பின் தோல்வி இழப்பை ஏற்படுத்தாது என்றே கூறலாம்.


மாறாக புதிய அதிபர் ஜோ பிடன் பதவியேற்ற நாளிலிருந்து ட்ரம்ப் அவர்களுக்கு எதிராக பல்வேறு சட்ட நடவடிக்கைகள் பாயும். அதிலிருந்து தன்னை பாதுகாத்து கொள்கின்ற முயற்சியில் கண்டிப்பாக வெற்றிப்பெற்றாக வேண்டும் என்ற சூழ்நிலையில் அதிபர் ட்ரம்ப் உருவாக்கி வருகிறார். சட்டம் தன் கடமையை செய்யும் பொழுது வெள்ளை மாளிகையின் வீதிமீறல்களை ட்ரம்ப் மீறி செயல்பட்டது நிருபிக்கப்பட்டால் ட்ரம்ப் அவர்கள் சிறை செல்லும் வாய்ப்பும் உருவாகலாம்.


- டெல்லி குருஜி