7 பேர் விடுதலையில் அரசியல் ஆதாயம் தேடுகிறார் அழகிரி! ஆளுநர் முடிவே 7 பேர் விடுதலையில் இறுதி முடிவு!! முதல்வர் எடப்பாடிக்கு வெற்றி கிடைக்குமா?

7 பேர் விடுதலையில் அரசியல் ஆதாயம் தேடுகிறார் அழகிரி!
ஆளுநர் முடிவே 7 பேர் விடுதலையில் இறுதி முடிவு!!
முதல்வர் எடப்பாடிக்கு வெற்றி கிடைக்குமா?


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதற்கு அவர் கூறும் காரணம் அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு 7 பேர் விடுதலை செய்வதை காங்கிரஸ் எதிர்க்கிறது. அதே நேரம் இந்த 7 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்யும் பொழுது காங்கிரஸ் கட்சி எதிர்காது என்கிறார். இந்த 7 பேர் கடந்த மூப்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனையை அனுபவித்து வருகிறவர்கள்.


மேலும் பேரறிவாளன் போன்ற நிரபராதியும் குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது விசாரணை அதிகாரிகள் நடத்திய விசாரணையின் போது பதிவு செய்யப்பட்ட வாக்கு மூலம் சில அழுத்தத்தின் காரணமாக தவறுதலாக பதிவு செய்யப்பட்டது என்று விசாரணை அதிகாரியே கூறியுள்ளார். இன்னொரு புறம் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உறுதி செய்த உச்சநீதி மன்றத்தின் நீதிபதியும் தனது தீர்ப்பின் சாரம்சத்தில் உள்ள குறைப்பாட்டினை தீர்ப்பில் உள்ள குற்றப்பாட்டினை சுட்டிக்காட்டி பேரறிவாளன் விஷயத்தில் தனது தீர்ப்பிற்கு பரிகாரம் வேண்டும் என்று கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.


ஆக தற்பொழுது ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கும் குற்றத்திற்கும் தொடர்பு இல்லை என்பதை புரிந்துக் கொள்ளும் அளவிற்கு விசாரணை அதிகாரிகளின் தகவலும் தண்டனை வழங்கிய நீதி அரசரின் கருத்துக்களும் உறுதிப்படுத்துகிறது. பேரறிவாளன் குற்றம்மட்டவன் என்பதை நிருபிக்கும் வகையில் அமைந்துள்ளது. பேட்டரி செல் வாங்கி வந்து கொடுத்த குற்றத்தை தவிர வேற எந்த தகவலும் பேரறிவாளனுக்கு தெரியாது என்பது விசாரணை காலத்தில் அதிகாரிகள் தெரிந்துக்கொண்ட உண்மை நிலவரம்.


பேரறிவாளனை இந்த வழக்கில் சேர்க்கவில்லையென்றால் ராஜீவ் கொலை வழக்கில் விசாரணையே நீர்த்துப் போகும் என்ற அளவில் பேரறிவாளனின் வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளோம் என்று விசாரணை அதிகாரிகளின் ஒருவரான ரகோத்தமன் அவர்கள் பல விவாதங்களில் வெளிப்படுத்திய செய்திகளில் இருந்து தெரியவருகிறது. ஆக மொத்தத்தில் இந்த ஏழு பேர் விடுதலை என்பது இப்போதைக்கு சாத்தியமில்லாத செய்தியாக திட்டமிட்டு அரசியலாக்கப்படுகிறது. ஏழு பேர் விடுதலையில் முழுக்க முழுக்க அரசியல் கலந்திருப்பதால் தற்போதுள்ள சூழ்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பத்திற்கேற்ப தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஏழு பேர் விடுதலையில் கவனம் செலுத்தி அதிமுக அமைச்சரவையின் தீர்மானத்தின்படி ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநரிடம் அழுத்தம் கொடுத்து ஏழு பேரும் விடுதலை ஆகிவிட்டால் அரசியல் ஆதாயம் முழுவதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மாறிவிடும் என்கின்ற கணக்குப் போட்டு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் ஏழு பேர் விடுதலையை ஆதரிக்கும் பொழுது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி மட்டும் ஏன் எதிர்ப்பதன் என்ன? அழகிரியை பின்னால் இருந்து இயக்குவது யார்? என்ற கேள்வியும் எழுகிறது.


ஒரு நாட்டின் விடுதலை மாற்று நீதிமன்றம் பல்நோக்கு என்ற மறுக்கிறார்கள் ஒரு நாட்டின் பிரதமரை படுகொலை செய்து அந்த நாட்டுக்கு இழுக்கு ஏற்படுத்திக் கொடுத்த கொலைக்காரர்களை விடுதலை செய்யவேண்டும் என்பதில் இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் அரசியலுக்கு அப்பாற்பட்டு மாற்று கருத்துகள் இருக்கலாம். ஆனால் தண்டனை பெற்ற ஏழு பேர்கள் மட்டும் தான் குற்றவாளி என்று நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. ஆனால் உண்மையான குற்றவாளிகளை கண்டறிய நியமிக்கப்பட்ட பல்நோக்கு விசாரணை ஆணையம் இதுவரை எந்தவிதமான விசாரணையையும் ஏன் தொடங்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. இது குறித்து காங்கிரஸ்காரர்கள் ஏன் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க மறுக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.


ஜெயின் கமிஷன் விசாரணையின் போது அதில் கூறப்பட்டுள்ள கருத்துகள் குறித்தும் ஏன் காங்கிரஸ்காரர்கள் கேள்வி கேட்காமல் மௌனம் சாதிக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைப்பெற்ற பொழுது பல்நோக்கு விசாரணை ஆணையத்தை தூசி தட்டி எழுப்பி உண்மை குற்றவாளிகளை கண்டறிவதற்கு ஏன் அந்த ஆணையத்தை முடுக்கிவிட மத்திய அரசாங்கம் தயக்கம் காட்டியது முயற்சி எடுக்கவில்லை .


சோனியாகாந்தி அவர்களும் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் அவர்களும் அப்பொழுது நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த கே.எஸ்.அழகிரி அவர்களும் ஏன் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களிடம் அழுத்தம் கொடுக்காமல் ஏன் வாய் மூடி மௌனமாக இருந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. பிரதமர் நரசிம்மராவ் ராஜீவ்காந்தி இறந்த பொழுது பிரதமராக இருந்த நரசிம்மராவ் அமைச்சரவையில் துறை இணை அமைச்சராக இருந்த சிதம்பரம் அவர்கள் ராஜீவ்காந்தி குறித்த விசாரணை கோப்புகள் காணாமல் போய்விட்டது என்று நாடாளுமன்றத்தில் அறிவித்த பொழுது காங்கிரஸ்காரர்கள் மௌனமாகத் தானே இருந்தார்கள். அதுமட்டும் அல்ல உள்துறை அமைச்சராக இருந்த ராஜேஷ்பைலட் அவர்கள் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட சந்திராசுவாமி அவர்களை கைது செய்யவேண்டும் என்று உத்தரவு இட்ட பொழுது அவரது இலாக்காவை பறித்து வேறு இலாக்காவுக்கு ராஜேஷ்பைலட் மாற்றப்பட்ட பொழுது காங்கிரஸ்காரர்கள் ஏன் மௌனமாக இருந்தார்கள்.


பிரதமர் நரசிம்மராவிடம் அழுத்தம் கொடுத்து உண்மை குற்றவாளிகளை கண்டறிவதற்கு ஏன் அழுத்தம் தரவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. குறிப்பாக ராஜீவ்காந்தி அவர்கள் கொலை இந்தியர்களாக உள்ள ஒவ்வொருவருக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு துயரம். குறிப்பாக தமிழர்களுக்கு மிகப் பெரிய அவமானம். இப்படி ஒரு துயர சம்பவம் நிகழ்ந்தது ராஜீவ்காந்தி அவர்களின் சுற்றுப்பயணத்திற்கு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி கூறிய பொழுது அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பாமல் ராஜீவ்காந்தியை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து கொலைகாரர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அரசியல் தலைவர்கள் யார் என்ற கேள்விக்கும் இதுவரை எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை.


முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் நல்லாட்சிக்கு ஏழு பேர் விடுதலை என்பது நற்பெயரை தமிழர்கள் மத்தியில் நற்பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது என்கின்ற நோக்கத்துடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி அரசியல் ஆதாயம் தேடுகிறாரா? பேரறிவாளன் உள்பட இந்த 7 பேரின் விடுதலையை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி எதிர்த்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது.


தற்போதைய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிலைமையும் ஒவ்வொரு மாநிலத்தின் ஆட்சியை இழந்து வரும் நிலையிலும் காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை இழந்து நிற்கின்ற நிலையிலும் இதுபோன்ற பேட்டிகள் மேலும் காங்கிரஸ் இயக்கத்தை பின்னுக்கு அழைத்து செல்லுமே தவிர எந்த வகையிலும் வெற்றிக்காக உதவாது. ராஜீவ் மரணத்தை முன்வைத்து அரசியல் ஆதாயம் தேடுவது என்பது தமிழக காங்கிரஸ் கட்சிக்கு மேலும் மேலும் இழப்புகளை தருமே தவிர வெற்றிக்கு வழிவகுக்காது. தமிழ்நாட்டில் இனி எந்த காலத்திலும் காங்கிரஸ் ஆட்சியும் உருவாகாது. 7 பேர் விடுதலை என்பது சட்டத்தின் முன் முடிவுக்காக காத்திருக்கிறது. அதற்கு அழகிரி அவர்கள் முட்டுக்கட்டை போடவேண்டாம் என்பதே பல தமிழறிஞர்கள், சட்ட வல்லுநர்கள், பல காங்கிரஸ்காரர்களின் கருத்தாக உள்ளது.


- டெல்லி குருஜி