அதிமுக கூட்டணியில் பாமக உறுதி!

அதிமுக கூட்டணியில் பாமக உறுதி!


பாட்டாளி மக்கள் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாமகவிற்கு உத்தரவாதம் வழங்கியுள்ளார். பாமகவிற்கு எத்தனை தொகுதிகள் என்பதும் எந்த எந்த தொகுதி என்பதும் இப்போதைக்கு பேசி முடிக்கவில்லை. பாஜக கட்சி கூட்டணியை உறுதி செய்த பொழுது அவர்களுக்கு எத்தனை தொகுதி என்பதை முதலில் முடிவு செய்துவிட்டு பிறகு இரண்டாவதாக பாமக கேட்கும் தொகுதிகள் குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்று அதிமுக தரப்பில் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.