சினிமா அரசியல் ஆவது ஏன்? நடிகர் விஜய்சேதுபதி முடிவு என்ன?

சினிமா அரசியல் ஆவது ஏன்?
நடிகர் விஜய்சேதுபதி முடிவு என்ன?


விஜயசேதுபதி ஒரு கிரிக்கெட் வீரர் தோற்றத்தில் ஒரு தமிழ் திரைப்படத்தில் நடித்ததை தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் தலைவர்களும், சினிமா துறையினரும், பாடலாசிரியர்களும், ஏற்க மறுத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். முத்தையா முரளிதரன் இலங்கை கிரிக்கெட் வீரர் தமிழ்நாட்டை சேர்ந்த அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையின் உரிமையாளருமான டாக்டர் இராமமூர்த்தி அவர்களின் மகளை திருமணம் செய்துள்ளார். அப்பொழுது எந்தவித எதிர்ப்பும் தமிழ்நாட்டில் இருந்து முத்தையா முரளிதரனுக்கு எதிராக முன்வைக்கப்படவில்லை. இலங்கை 1 1/2 இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த பொழுது எத்தகைய முயற்சிகளும் மேற்கொண்டு ஈழ தமிழர்கள் படுகொலையை தடுத்து நிறுத்த இயலவில்லை. இப்படிப்பட்ட சூழலில் முத்தைய முரளிதரன் இலங்கை அரசின் நடவடிக்கைகளை ஆதரித்தார். இதனால் இனியநாள் என்று தன் கருத்தை பதவு செய்தார் என்பதற்காக முத்தையா முரளிதரனை தமிழக அரசியல் கட்சி தலைவர்களோ திரைப்பட நட்சத்திரங்களோ எதிர்ப்பு குரல் எழுப்பவில்லை.


அதே போல் இலங்கை தமிழர்களை கொன்று குவித்து ஆட்சியை இழந்தபோதும் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய ராஜபக்சே அவர்களின் நடவடிக்கை தமிழர்களுக்கு எதிராக அமைந்து இருப்பதை தட்டி கேட்கும் விதமாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதில் நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது அரசியல் கட்சி தலைவர்களோ தீவிரம் காட்டுவதில்லை. ராஜபக்சே அவர்கள் இந்திய மண்ணில் கால்பதித்த போதெல்லாம் அவருக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்புவதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்னும் சிலர் தங்கள் ஆதாங்கத்தையும் தங்கள் எதிர்ப்பு குரல்களையும் தொடர்ந்து பதிவிடுவார்கள். ஒரு கட்டத்தில் ராஜபக்சேவின் ஆதரவுப்பெற்ற (லைக்கா) நிறுவனம் தமிழகத்தில் கால்பதித்து திரைப்படம் தயாரித்த பொழுது அதற்கு எதிராக விஜய் நடித்த (கத்தி) திரைப்படம் தயாரித்தப் பொழுது அதை எதிர்த்து குரல் கொடுத்த வேல்முருகன் அவருக்கு ஆதரவாக எவரும் குரல் எழுப்பவில்லை .


அப்பொழுது ஆளும்கட்சியாக இருந்த அதிமுக ஜெயலலிதா அம்மையார் அவர்கள் கத்தி திரைப்படத்தில் நடித்த விஜய் அவர்களுக்கு ஆதரவாக எந்த குரலையும் எழுப்பவில்லை. அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களை சூப்பர் ஸ்டார் ரஜினி உள்பட முன்னணி கதாநாயகர்களை வைத்து இலங்கையை சேர்ந்த லைக்கா திரைப்பட கம்பெனி திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டப் பொழுது எந்தவித எதிர்ப்பு இயக்கங்களும், அரசியல் வாதிகளும், தங்கள் எதிர்ப்பு கருத்துகளை வெளிப்படுத்தவில்லை . இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்துள்ள திமுக மற்றும் பல அரசியல் கட்சிகள் இலங்கை தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட காங்கிரஸ் இயக்கத்தை தமிழ்நாட்டில் இருந்து தனிமைப்படுத்துவதற்கு வேண்டுமென்று ஒருவரும் குரல் எழுப்பவில்லை.


திராவிடர் கழகம் வீரமணி அவர்களும் தனது ஆதரவாளர்களான பேரறிவாளன் விடுதலையை எந்தவித அக்கறையும் அழுத்தமும் ஆளுங்கட்சிக்கு தரவில்லை. அந்த 7 பேர் விடுதலையும் கிணற்றில் போட்ட கல்லாக ஆளுநர் மாளிகையில் கோப்பு ஆளுநர் முடிவுக்காக காத்துகிடக்கிறது. அந்த முடிவை விரைவாக அறிவிக்க வேண்டுமென்று எந்த முடிவையும் எந்த அரசியல் கட்சியும், எந்த திரைப்பட நடிகர்களும், பாடலாசிரியர்களும் தொடர்ந்து குரல் எழுப்பவில்லை. ஒரு நடிகர் தன் தொழிலை தொழிலாக செய்ய நினைக்கும் பொழுது அதை தடுக்கின்ற விதமாக அரசியல்வாதிகளும் சினிமா துறையை சேர்ந்தவர்களும் குரல் எழுப்புகிறார்களா? அல்லது இலங்கை தமிழர்களுக்கு இதனால் விடிவுகாலம் பிறக்கும் என்று நம்பிக்கொண்டு முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என்று அழுத்தம் தருகிறார்களா? என்பது புரியவில்லை .


தமிழ் திரைப்படத்தில் பெரும்பாலும் மாற்றுமொழி பேசுகிற நடிகர், நடிகைகளை வைத்து திரைப்படம் எடுத்த  பொழுதெல்லாம் நடிகைகளை அறிமுகம் செய்த போதெல்லாம் கூட தமிழ்நாட்டில் இருந்து குஷ்பு, நக்மா, ஜோதிகா, சிம்ரன், கஜோல், ஐஸ்வர்யாராய், தபு போன்ற வடநாட்டு நடிகைகளுக்கு தமிழ் படத்தில் நடித்த பொழுது தமிழ்நாட்டில் இருந்து எந்தவித எதிர்ப்பு குரலும் எழவில்லை. அதே போல் வடநாட்டை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மத்திய மாநில அரசு பணிகளை ஆக்கிரமித்த பொழுதும் தீவிர எதிர்ப்பை ஒருவரும் எழுப்பவில்லை. பண்ருட்டி வேல்முருகனை தவிர முத்தையா முரளிதரன் உருவ தோற்றத்தில் விஜய்சேதுபதி நடிப்பதால் எந்த வகையிலும் தமிழ்நாட்டின் உரிமையோ, தமிழர்களின் உடமையோ எந்த வகையிலும் பறிபோய் விடபோவதில்லை .


ஆனால் வழக்கத்தை விட ஒரு திரைப்படத்தில் நடித்தால் தனக்கு சம்பளம் எவ்வளவு கிடைக்குமோ அதைவிட ஒரு படி கூடுதலாக இந்த கேரக்டரில் நடிக்கும் பொழுது நடிகர் விஜய்சேதுபதிக்கு கூடுதல் சம்பளம் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. இதை புரிந்துக் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் இயக்கங்களும் திரைப்பட நடிகர்களும், தயாரிப்பாளர்களும், விஜய்சேதுபதிக்கு ஆறுதலான ஆலோசனை கூறலாம் தவறில்லை. அவரது வருவாயை தடுத்து நிறுத்துவதில் எந்தவித பயனும் தமிழர்களுக்கு கிட்டப்போவதில்லை . நடிகர் விஜய்சேதுபதி தமிழ்நாட்டில் எழுகின்ற உரிமைக் குரலுக்கு செவிசாய்த்து அந்த திரைப்படத்தில் இருந்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் நடிகர் விஜய்சேதுபதி அவர்களுக்கு மட்டுமே உண்டு.


/ சாமிி