அதிர்ச்சி தரும் அன்புமணியின் பேட்டி! ஆச்சரியத்துடன் வன்னியர்கள்!!

பு.தா.அருட்மொழி, அவரது சகோதரர் பு.தா.இளங்கோவன், மயிலாடுதுறை கொற்றவமூர்த்தி போன்றவர்களெல்லாம் வன்னியர் பகுதிகளுக்கு நேரில் சென்று வன்னியர் பகுதிகளில் ஆலோசனை செய்து டாக்டர் ராமதாஸ் அவர்களை அழைத்து கொடியேற்று விழா நடத்தி வன்னியர்களின் ஒற்றுமைக்கு அணி திரட்டினார்கள். இடைப்பட்ட காலங்களில் பல்வேறு போராட்டங்கள், ஊர்வலங்கள், பேரணிகள் நடத்தி ஒற்றுமை உணர்வை உருவாக்கினார்கள். இதன் உச்சக்கட்டமாக ஏழு நாள் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி 7 நாள் சாலை மறியல் போராட்டம் அறிவித்து தமிழக தம்பிச்சி போகின்ற அளவிற்கு ஒருவார காலம் தமிழகத்தில் போக்குவரத்து முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டு மிகப் பெரிய அளவில் இடஒதுக்கீட்டு போராட்டம் என்பது 20%, மத்தியில் 2%) நடைபெற்றது. இதன் இறுதி நாள் போராட்டத்தின் பொழுது காவல்துறையின் துப்பாக்கி சூட்டிற்கு 21 உயிர்கள் பலியாகின. அத்தனை பேரும் அப்பாவி வன்னியர்கள் என்பது பிற்காலத்தில் தெரியவந்தது.


பல்வேறு அரசியல் இயக்கங்களை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் குறிப்பாக அமைச்சராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த எம்.பி.சுப்பிரமணியம், திண்டிவனம் இராமமூர்த்தி, வாழப்பாடி ராமமூர்த்தி, எம்.கிருஷ்ணசாமி, இரா.அன்பரசு, வீரபாண்டி ஆறுமுகம், செஞ்சி இராமச்சந்திரன், மதுராந்தகம் ஆறுமுகம், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, இராமசாமி படையாட்சியார், மயிலாடுதுறை கிட்டப்பா போன்ற பல்வேறு அரசியல் இயக்கங்களை சார்ந்த வன்னியர் பிரமுகர்கள், டாக்டர் ராமதாஸ் தலைமையில் செயல்பட்ட வன்னியர் சங்கங்களின் செயல்பாட்டினை நேரடியாகவும், மறைமுகமாகவும், தங்களது ஆதரவினை தெரிவித்து இந்த சமுதாய மக்கள் உயிர்பலியினை தடுத்து நிறுத்துவதற்கு பெரும்மளவில் முயற்சி செய்தார்கள். பேராசிரியர் தீரன் அரசு பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். எண்ணற்ற கிராமங்களில் ஏராளமான இளைஞர்கள் காவல்துறையின் தாக்குதல்களுக்கு உள்ளாகி பொருளாதார இழப்புகளை சந்தித்து தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள்.


ஆயிரகணக்கானவர்கள் மீது கடும் குற்றச்செயல் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. லட்சக்கணக்கான இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கும், காவல் நிலையத்திற்கும் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து அலைந்து திரிந்தார்கள். பல்வேறு வகையில் உயிர் தியாகம் செய்து பொன் பொருள்களை இழந்து உருவாக்கப்பட்ட வன்னியர் சங்கம் காலப்போக்கில் அரசியல் இயக்கமாக உருவெடுத்தது. அதிமுக, திமுக போன்ற திராவிட கட்சிகளுடனும், காங்கிரஸ், பாஜக கட்சி போன்ற தேசிய கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் போட்டியிட்டு சட்டமன்றம் நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்று காங்கிரஸ் மத்திய அரசில் காங்கிரஸ் ஆட்சியிலும் அங்கம் வகித்தது. பாஜக ஆட்சியிலும் அமைச்சர்களாக பாமாகவினர் அங்கம் வகித்தனர்.


இந்த வகையில் பாமகவில் இருந்த சிலர் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாமகவில் இருந்து விலகி அதிமுக, திமுக, பாஜக இணைந்தார்கள். 1989 ஆம் ஆண்டு வன்னியர் சங்கம் தேர்தலை புறக்கணித்தது. திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக இரண்டாக பிளவுப்பட்டு ஜானகி தலைமையில் ஒரு அணியும், ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தனித்தும் மூப்பனார் தலைமையிலும் தேர்தலில் போட்டியிட்டது.


எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத திமுக 1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தது. முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் வன்னியர்களின் கோரிக்கையை ஏற்று 107 சாதிகளை இணைத்து 20% இடஒதுக்கீடு வழங்கி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் உருவாக்கி அறிவிப்பை வெளியிட்டார்கள். அதன் பிறகு அரசு பணிகளிலும், கல்வி வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு போதிய பிரதிநிதிதுவம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி தனி ஒதுக்கீடு குறித்தோ அல்லது 20% ஏற்பட்டுள்ள குறைப்பாடுகள் குறித்தோ எந்தவிதமான கோரிக்கையையும் அரசாங்கத்திடம் முன்வைத்து வன்னியர்களுக்கு சலுகைகளை பெற்றுத்தர முன்வரவில்லை.


இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சி வேகமாக தமிழகத்தில் வளர்ச்சிப் பெற்றது. மத்திய ஆட்சியின் பங்கும் மாநில அரசின் சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டும் அதிகாரத்தில் இருந்து வந்தது. குறிப்பாக மத்திய அரசில் அங்கம் வகித்தப்போது மருத்துவத்துறை, சுரங்கத்துறை, இரயில்வே துறை, பெட்ரோலியத்துறை போன்ற முக்கிய துறைகளில் அமைச்சர்களாக அங்கம் வகித்தார்கள். அப்பொழுதும் வன்னியர்களின் போராட்ட காலத்தில் முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலனை செய்து அரசு பணிகளில் வன்னியர்கள் பெருமளவில் வேலைவாய்ப்பை பெறவில்லை..


மாறாக வன்னியர் என்பதால் அரசு துறையிலும் தனியார் நிறுவனங்களிலும் பணியில் சேர்வதற்கு வாய்ப்பு கிடைத்தும், பல பேர் புறக்கணிக்கப்பட்டார்கள். வாய்ப்பை இழந்தார்கள் இது கடந்த கால வரலாறு. டாக்டர் அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகவும், தருமபுரியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், 2004 ஆம் ஆண்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும் பாட்டாளி மக்கள் கட்சியின் பிரதிநிதியாக பதவி வகித்தார். அரசு தரப்பில் இருந்து பல்வேறு நல்ல காரியங்களை அவர் செய்திருந்தாலும் சமுதாயத்திற்கு என்று அவர் நேரடியாக எத்தகைய முறையில் உதவி செய்திருக்கிறார் என்பது அவர் அறிவித்தால் மட்டுமே புரிந்துக்கொள்ள முடியும். அவரது சாதனையில் 108 ஆம்புலன்ஸ் பிரபலமாக பேசப்படுகிறது.


சில அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதலாக நிதியினை ஒதுக்கி சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கு உதவி செய்திருக்கிறார். மது ஒழிப்பு, புகையிலை ஒழிப்புக்கு போன்றவற்றில் உலகத்தார் கவனத்தை ஈர்த்துள்ளார். ஆனால் வன்னியர்களுக்கு என்று குறிப்பிடும்படியான எத்தகைய நிலையினை அவர் எடுத்தார் என்பது இதுவரை பிரபலம் அடையவில்லை . இருந்தாலும் வன்னியர் சங்கமும் பாட்டாளி கட்சியும், டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களை தலைவராக ஏற்றுக்கொண்டு அவரது பின்னால் அணிவகுத்து செல்கின்றார்கள். கடந்த 33 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் கட்சியாகவும், 10 ஆண்டு காலம் வன்னியர் சங்கமாகவும் பாட்டாளி மக்கள் கட்சியின் அங்கமாகவும் திகழ்கிறது. வன்னியர் சங்கம் என்பது அனைவரும் அறிந்ததே!


இந்த நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்கள் கட்சி என்ற கரை என் மீது படிந்திருந்தது. அந்த கரை தற்பொழுது விலகி விட்டது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அவர்களை அருகில் வைத்துக் கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி வன்னியருக்கு மட்டும் சொந்தமான கட்சி இல்லை என்று சொல்வதில் தவறில்லை. ஆனால் வன்னியர்கள் கரை என்று சொல்வதும் நான் வன்னியர் சங்கத்திற்கு அப்பாற்பட்டவன் என்று கூறுவதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு அதிர்ச்சி தகவலாகவே பார்க்கப்படுகிறது.


பாட்டாளி மக்கள் கட்சி என்றால் அது வன்னியர்களின் வாக்குவங்கி என்று நினைத்து தான் அதிமுக, திமுக. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியை விரும்புகிறார்களே தவிர, தனிப்பட்ட டாக்டர் இராமதாஸ் அவர்களையோ, டாக்டர் அன்புமணி அவர்களையோ விரும்பி கூட்டணியில் எந்த அரசியல் கட்சியும் சேர்ப்பதில்லை. தமிழக அரசியல் கட்சி தலைவர்களில் அறிவார்ந்த புதிய சிந்தனை, புதிய திட்டம், புதிய வழிகாட்டுதல் போன்றவற்றில் டாக்டர் அன்புமணி அ நான் வித்தியாசமானவர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளட்டும். அதில் தவறில்லை! ஆட்சேபனையும் தேவையில்லை! மஞ்சள் சட்டை அணிவதை வரவேற்கிறோம். மற்ற அரசியல் கட்சி தலைவர்களை விட தான் முதன்மையானவராக விளங்கலாம். அதற்காக வன்னியர்களை குறைத்து மதிப்பிட வேண்டிய தேவையில்லை. வன்னியர்களை புறக்கணித்துவிட்டு அரசியலும் செய்யாதீர்கள் என்கின்ற அன்பான வேண்டுகோளை அதிர்ச்சி அடைந்த வன்னியர்கள் சார்பில் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.


வன்னியர்களை விட்டு விலகிச் செல்வதால் எத்தகைய வளர்ச்சியை தாங்கள் அடைய முடியும்? தமிழ்நாட்டை பொறுத்தவரை ஐஎஸ்ஐ முத்திரை பதித்த சங்கம், வன்னியர் சங்கம் மட்டுமே. ஆனால் ஒற்றுமையின்மை மட்டும் இவர்களிடம் இல்லை என்பது மிக மிக வருத்தமே.


இப்படி ஒரு புலம்பல் பொதுவாக வன்னியர்கள் மத்தியில் ) எழுந்துள்ளது என்ற தகவல் நம் காதுகளுக்கு எட்டியது. அதனை வெளிப்படுத்தும் விதமாக இந்த பதிவினை வாசகர்களுக்கு வெளியிடுகிறோம்.


ஏற்பதும், மறுப்பதும் அவர் அவர்கள் விருப்பம்! வாசகர்களின் விருப்பமே எங்கள் விருப்பம்!


- அக்னிமலர்கள் (24.10.2020)


 


 


Popular posts
Image
Image
Image
வாழ்க்கை முடங்கிப் போச்சு! வாழ்வாதாரம் எங்கோ போச்சு!! வாழ்க்கை முடங்கிப் போச்சு! வாழ்வாதாரம் எங்கோ போச்சு!! ஆறுதல் தரும் இந்த நம்பிக்கை வார்த்தைகள்! மனிதன் வாழ்வுக்கும் உயிர் வாழ்வதற்கும் உத்தரவாதம் தருகிறது! மரண பயம், தூக்கமின்மை வீடே சிறைக் கூடமானது. உலகமே அஞ்சி நடுங்குகிறது. உயிர் பலியான எண்ணிக்கை உயர்வதை பார்த்து அகிலம் இரவு, பகல் உழைத்து உயிர் கொள்ளிக்கு மருந்து தேடி முயற்சிகள் எடுத்து வருகிறது. கருவின்றி தோன்றிய உருவான கொரனா மனிதனுக்கு காலனாய் உருவெடுத்தது! அறிகுறி இல்லாமலே குரல்வளையில் குடியேறி உயிர்பறிக்க துடிக்கிறதே. விலகி நின்றால் விரட்டலாம் என்று அரசு மருத்துவம் கூறுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் உற்சாகம் குன்றிய வாழ்க்கை உதவிக்கரம் நீட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்பு வீதிகளில் மனித நடமாட்டம் இல்லாமல் இது சாத்தியம் இல்லை! இதயம் சுயமாகவே தன்னை தானே ஆறுதல் கூறிக்கொள்கிறது. எத்தகைய சூழ்நிலையிலும் இல்லத்தை விட்டு கூட்டமாக கூடாதீர்கள் என்று அரசு உத்தரவு அவ்வப்பொழுது அச்சுறுத்திக் கொண்டே உள்ளது. ஊடகங்கள் மருத்துவர்களின் சேவையை படம்பிடித்துக் காட்டி மனவலிமையை உறுதிப்படுத்துகிறது. கூடவே 'நோய்' தொற்று அபாயத்தையும் எடுத்துரைத்து எச்சரிக்கையும் செய்கிறது. தீர்வுக்கு வழி என்ன? இதுவரையில் மருந்து கண்டுப்பிடிக்க இயலவில்லை ! என்கிறது உலக சுகாதார நிறுவனம்! கணவன், மனைவி அப்பா, அம்மா, தம்பி, தனையன், சித்தப்பா, சித்தி, நண்பர்கள், உற்றார், உறவு அத்தனையும் தனித்தனியாக பிரிந்துக் கிடக்கிறது. இது விதியின் விளையாட்டா! இயற்கை சதியின் சவாலா! நான் அறியேன் பராபரமே...! வீதிகளில் மனிதர்கள் நடமாட்டம், சாலைகள் தோறும் நடைப்பயணம் இல்லந்தோறும் வறுமை உத்தரவாதம் இல்லாத ஊழியர்கள் வேலை இழந்து பரிதவிக்கும் பரிதாப நிலையில் பசி, பட்டினி, பஞ்சம் அரசின் அறிவிப்பும் ஆறுதல் தரவாய்ப்பில்லை . பிழைக்க வந்த இடம் விட்டு, பிறந்த இடம் தேடும் பாட்டாளிகள், சுடு வெயில் சுட்டெரிந்தாலும் பட்டினி வாட்டினாலும் சொந்த ஊர் சென்றுவிடுவது சுகம் தரும் என்று தங்கள் வாழ்வாதாரத்தை துரந்து நடைப்பயணம் சாலை வழியில்! எத்தனையோ மரணங்கள் பலரது அழுகுரல்கள், ஆறுதல் கூறதேறுதல் சொல்ல யார் என்ற கேள்வி! அரசின் உதவி வந்து சேரவில்லை . ஒருபுறம் வந்து சேறும் என்ற நம்பிக்கைகள் இன்னொரு புறம் வாழ்க்கையின் சுகம் துக்கமாக மாறுகிறது! மூச்சுகாற்றும் சுடுகிறது. இல்லந்தோறும் இல்லாமை, முட்டல், மோதல் வலுக்கிறது. பள்ளி, கல்லூரி, தொழிற் கூடம் முடிக்கிடக்கிறது. அரசின் ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கிறது. அலுவலகம் திறக்க அனுமதி வழங்கினாலும் ஊழியர்கள் வருவது எப்படி என்ற கேள்வி எழுகிறது. பொது போக்குவரத்து முடக்கம்! - சாமி
Image
கொரோனா பீதியால் உடுமலையில் வெறிச்சோடிய சுற்றுலாத்தலங்கள்
Image